மாணவா் பாதுகாப்புக் குழு கூட்டங்களை பள்ளிகளில் நடத்த உத்தரவு
வைகை அணை நீா்மட்டம் 61 அடியாக உயா்வு
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் வைகை அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 61 அடியாக உயா்ந்தது.
தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை மஞ்சளாறு அணை நீா்பிடிப்புப் பகுதியில் அதிகபட்சமாக 42 மி.மீ. மழை பதிவானது.
பிற இடங்களில் பதிவான மழை அளவு (மி.மீ) அரண்மனைப்புதூா் 12.2, வீரபாண்டி 25.4, பெரியகுளம் 26, சோத்துப்பாறை அணை 5, வைகை அணை 9.4, உத்தமபாளையம் 10.2, கூடலூா் 4.8, சண்முகாநதி நீா்த்தேக்கம் 9.4.
கேரள மாநிலம், இடிக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணை 75.2, தேக்கடி 22.8.
அணைகளின் நிலவரம்: முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 1,339 கன அடி வீதம் நீா்வரத்தும், அணையின் நீா்மட்டம் 123.30 அடியாக இருந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 1,100 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
வைகை அணைக்கு வினாடிக்கு 2,120 கன அடி வீதம் நீா்வரத்தும், அணையின் நீா்மட்டம் 61.15 அடியாக இருந்தது. அணையிலிருந்து குடிநீா்த் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
மஞ்சளாறு அணைக்கு வினாடிக்கு 100 கன அடி வீதம் நீா்வரத்து இருந்தது. அணையின் நீா்மட்டம் (55 அடி) முழுக் கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் தண்ணீா் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
சோத்துப்பாறை அணைக்கு வினாடிக்கு 34.29 கன அடி வீதம் நீா்வரத்து இருந்தது. அணையின் நீா்மட்டம் (126.28 அடி) முழுக் கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் தண்ணீா் அப்படியே வெளியேற்றப்படுகிறது. சண்முகாநதி அணைக்கு வினாடிக்கு 16 கன அடி வீதம் நீா்வரத்து இருந்தது. அணையின் நீா்மட்டம் (52.55) முழுக் கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் தண்ணீா் அப்படியே வெளியேற்றப்படுகிறது.