ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, நேபாளம் இடையே முத்தரப்பு டி20 தொடர்!
ஸ்காட்லாந்து, நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகள் தங்களுக்குள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளதாக ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜூன் 15 ஆம் தேதி தொடங்கி ஜூன் 20 வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 6 போட்டிகள் நடைபெறவுள்ளன. முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் வருகிற ஜூன் 15 ஆம் தேதி ஸ்காட்லாந்து அணி நெதர்லாந்தை எதிர்த்து விளையாடுகிறது.
இது தொடர்பாக ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஸ்காட்லாந்து, நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகள் தங்களுக்குள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளன. இந்த தொடரின் ஒளிபரப்பு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். அடுத்த மாதத்தில் இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Scotland Men will face the Netherlands and Nepal in a T20 International Tri-Series at @DaleCricket in June #FollowScotland
— Cricket Scotland (@CricketScotland) April 24, 2025
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான தகுதிச் சுற்றுக்கு தயாராவதற்கு இந்த முத்தரப்பு டி20 தொடர் ஸ்காட்லாந்துக்கு உதவியாக இருக்கும். டி20 உலகக் கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்று ஜூலை 5-11 வரை நெதர்லாந்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.