செய்திகள் :

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

post image

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான மைக்கேல் ஸ்லாட்டருக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 55 வயதான மைக்கேல் ஸ்லாட்டர் மீது 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மைக்கேல் ஸ்லாட்டர் ஒரு பெண்ணைத் தொடர்ந்து துன்புறுத்தி தாக்குதல் நடத்திவந்துள்ளார். தாக்கப்பட்ட பெண் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அந்தப் பெண் குயின்ஸ்லாந்தின் நூசா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் கடந்த 2023 ஆம் ஆண்டில் இருந்து மைக்கேல் ஸ்லாட்டர் அந்தப் பெண்ணைத் துன்புறுத்தியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சிஎஸ்கே அணி வீரரின் தந்தை காலமானார்!

மைக்கேல் ஸ்லாட்டருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலும், அவர் விடுவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்லாட்டருக்கு கடந்தாண்டில் ஜாமீன் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்கனவே ஒரு வருடத்திற்கும் மேலாக காவலில் இருந்துள்ளார்.

ஸ்லாட்டரின் மீதமுள்ள தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் இதுபோன்று மீண்டும் கடுமையான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால் சிறைக்குச் செல்வது உறுதிசெய்யப்படும் என்று மாரூச்சிடோர் மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் வலது கை ஆட்டக்காரரான ஸ்லாட்டர் ஆஸ்திரேலிய அணிக்காக 1993 முதல் 2003 வரையிலான காலகட்டத்தில் 74 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தமிழக வீரரிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்: ரஷித் கான்

10 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.70 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் ஷிவம் துபே..!

சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே 10 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.70 ஆயிரத்தை வழங்குவதாகக் கூறியுள்ளார்.ஆல்ரவுண்டரான ஷிவம் துபே சிஎஸ்கே அணிக்காக 2022 முதல் விளையாடி வருகிறார். டிஎன்எஸ்ஜேஏ (தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் ஜா... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் 112 ரன்கள் முன்னிலை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 112 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (ஏப்ரல் 20) சில்ஹட்டில்... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் நிதான ஆட்டம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 25 ரன்கள் பின் தங்கியுள்ளது.ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு... மேலும் பார்க்க

பிசிசிஐ ஒப்பந்தம்: ரோஹித், கோலிக்கு ஏ+; ஸ்ரேயாஸ், இஷான் சேர்ப்பு! முழு விவரம்..

2025 - 26 ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ருதுராஜ் ஜெய்க்வாட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.கடந்தாண்டு பட்டியலில் இருந்த ஷர்துல் தாக்கூர், கேஎஸ் பரத், ஜித்தேஷ் சர்மா, ஆ... மேலும் பார்க்க

இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் நீக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராக உள்ள மும்பையைச் சேர்ந்த அபிஷேக் நாயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேபோல், பந்துவீச்சுப் பயிற்சியாளர் திலீப் மற்றும் உதவிப் பணியாளர் சோஹம்... மேலும் பார்க்க

46 வயதில் தந்தையான ஜாகீர் கான்! குவியும் வாழ்த்துகள்!

முன்னாள் இந்திய வீரரும் லக்னௌ அணியின் ஆலோசகருமான ஜாகீர் கான், அவரது மனைவி சஹாரிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இடதுகை வேகப் பந்துவீச்சாளரான ஜாகீர் கான் 2017இல் ஓய்வு பெற்றார். பிறகு மும்பை இந்தியன்... மேலும் பார்க்க