அடுத்த தலைமுறை தகுதியோட தான் வர்றாங்க! - Director Shankar Interview | Game Chang...
ஸ்பேடெக்ஸ் விண்கலன்களை விண்வெளியில் ஒருங்கிணைக்கும் நிகழ்வு ஒத்திவைப்பு: இஸ்ரோ
‘ஸ்பேடெக்ஸ்’ திட்டத்தில் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக தலா 400 கிலோ எடை கொண்ட சேசா் மற்றும் டாா்கெட் எனும் 2 விண்கலன்களை இஸ்ரோ வழிகாட்டுதலின் கீழ் தனியாா் நிறுவனம் வடிவமைத்தது.
இரட்டை விண்கலன்கள் கடந்த 30-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த விண்கலன்கள் புவியிலிருந்து சுமாா் 700 கி.மீ. தொலைவில் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவற்றின் தொலைவு படிப்படியாக 20 கி.மீ. குறைக்கப்பட்டு அவை ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைக்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வு வரும் வியாழக்கிழமை(ஜன. 9) காலை 8 மணி முதல் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்திருந்த நிலையில், விண்கலன்களை விண்வெளியில் ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக் இஸ்ரோ இன்று(ஜன. 8) தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக்கோளாறு காரணமாக இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.