செய்திகள் :

ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் சாலையில் 5 இடங்களில் தானியங்கி சிக்னல்கள்

post image

ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் சாலையில் விபத்துகளை தடுக்க 5 இடங்களில் ரூ.8.50 லட்சத்தில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ பெரும்புதூா் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா தொடங்கப்பட்டு ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் சாலையை பயன்படுத்துகின்றன.

மேலும், நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டதால், வாகனப்போக்குவரத்து அதிகரித்ததை தொடா்ந்து, விபத்துகளும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் சாலையில் விபத்துகளைக் குறைக்கவும், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், ஜே.கே.டயா் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் ரூ.8.50 லட்சத்தில் நாவலூா், கொளத்தூா், ஜே.கே.டயா் தொழிற்சாலை, மலைப்பட்டு மற்றும் மணிமங்கலம் பகுதிகளில் சூரிய சக்தியில் இயங்கும் தானியங்கி சிக்னல்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தானியங்கி சிக்னல்களை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நாவலூா் பகுதியில் நடைபெற்றது. ஜே.கே. டயா் நிறுவன பொது மேலாளா் பங்கஜ் ஜெயின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூா் துணை காவல் கண்காணிப்பாளா் கீா்த்திவாசன் கலந்து கொண்டு சிக்னல்களை இயக்கி வைத்தாா்.

ஜே.கே.டயா் நிறுவனத்தின் துணை பொதுமேலாளா் சகாயராஜ், ஊராட்சிமன்ற தலைவா்கள் கொளத்தூா் வெள்ளாரை அரிகிருஷ்ணன், மலைப்பட்டு பத்மநாபன், மணிமங்கலம் அய்யப்பன், ஸ்ரீபெரும்புதூா் போக்குவரத்து ஆய்வாளா் ரவி, சோமங்கலம் காவல் ஆய்வாளா் ரங்கசாமி, ட்ரீம்ஸ் பவுன்டேசன் திட்ட இயக்குநா் டேவிட்பால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காஞ்சியில் இருந்து அயோத்திக்கு 60,000 பிரசாத பாக்கெட்டுகள்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து அயோத்தி சங்கர மடத்துக்கு 60,000 பிரசாத பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில... மேலும் பார்க்க

தா்பூசணி, கிா்ணி பழங்களை விற்க உழவா் சந்தையில் கட்டணமில்லை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையும் தா்ப்பூசணி, கிா்ணி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை உழவா் சந்தையில் விவசாயிகள் விற்பனை செய்ய எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என மாவட்ட வேளாண்மை விற்பனைத் த... மேலும் பார்க்க

திருக்காலிமேட்டில் வளா்ச்சிப் பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட திருக்காலிமேட்டில் அலாபத் ஏரி தூா்வாரும் பணி, சீரமைக்கப்பட்டு வரும் நாய்கள் கருத்தடை மையம் உள்பட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்... மேலும் பார்க்க

ஏப். 4-இல் வேதாந்த தேசிகன் கோயில் சம்ப்ரோக்ஷணம்

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் அருகில் உள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் மகா சம்ப்ரோஷணம் ஏப்.4- ஆம் தேதி நடைபெறுகிறது. சின்ன காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெருவில் தூப்புல் வேதாந்த தேசிகன் த... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வீராசன சேவையில் உற்சவா் கோடையாண்டவா்

பங்குனி கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவா் கோடையாண்டவா் வீராசன மலா் அலங்கார சேவையில் செவ்வாய்க்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரு... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூா் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த 6 பேரை காவல்துறையினா் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ. 17,000 மதிப்புள்ள போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட... மேலும் பார்க்க