Vikatan Tele Awards 2024: "விஜய் சார்ட்ட இந்தக் கேள்விதான் கேட்பேன்" - திவ்யதர்ஷ...
ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதியிலிருந்து வந்த பட்டு வஸ்திரம்; ஆண்டாளுக்கு அணிவித்து சிறப்பு பூஜை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து திருப்பதி திருமலை புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழாவிற்கு கருட சேவையின்போது மலையப்ப சாமி அணிவதற்காக ஆண்டாள் சூடி களைந்த மாலை, பட்டு வஸ்திரம், கைக்கிளி ஆகியவை கொண்டு செல்லப்பட்டு அணிவிக்கப்படும்.
அதே போல் திருப்பதி திருமலை கோயில் நிர்வாகம் பதில் மரியாதையாக ஆண்டாள் நாச்சியாருக்கு பட்டு வஸ்திரத்தை அனுப்பி வைக்கும்.

அந்தவகையில் இந்த ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருப்பதி திருமலைக்குச் சென்ற மங்கள பொருள்களை திருப்பதி தேவஸ்தானம் பெற்றுக்கொண்டு கருட சேவையின் போது உற்சவருக்கு அணிவித்தது.
அதற்குப் பதிலாக திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம், மங்கள பொருட்களை அனுப்பி வைத்தது. அதனை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நிர்வாகம் பெற்றுக்கொண்டு ஆண்டாளுக்கு அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சக்கரை அம்மாள் மற்றும் அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.