செய்திகள் :

குருவின் அருளைப் பெற்று தரும் கால பைரவ பூஜை; 7 காரணங்களுக்காக இந்தப் பரிகாரம்

post image

அதிசார குருபெயர்ச்சி உங்களுக்கு நன்மைகள் தர, துன்பங்கள் நீங்க 14-10-2025 தேய்பிறை அஷ்டமி நன்னாளில் அவல்பூந்துறை ஊரை அடுத்த ராட்டைச் சுற்றிபாளையம் ஆலயத்தில் மகாகால பைரவ பூஜை நடைபெற உள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

கால பைரவ பூஜை

2025 அக்டோபர் மாதம் 18-ம் தேதி கடகத்தில் நுழையும் குருபகவான், டிசம்பர் 5-ம் தேதி வரை 48 நாள்கள் தங்கியிருந்து அதீதமான பலன்களை அள்ளித் தரப்போகிறார். அதிசார குருபெயர்ச்சி என்று ஜோதிடம் குறிப்பிடும் இந்த நிகழ்வால் 12 ராசிகளுக்கும் சாதக பாதக நிகழ்வுகள் பல ஏற்படவுள்ளன. குறிப்பாக மிதுன ராசியில் ஜன்ம குரு, தன ஸ்தானத்துக்கு செல்வதால் பணவரவு உண்டாகும். கன்னி ராசியில் லாப ஸ்தானத்தில் இருந்து முன்னேற்றம் அளிக்கும். விருச்சிக ராசியில் 9-ல் இருந்து அமைதி தரப்போகிறார். மகர ராசியில் 7-ல் இருந்து ஆனந்தம் தரப்போகிறார். மீன ராசியில் கஷ்டங்கள் நீங்கி இன்பம் அளிக்கவுள்ளார். அதுமட்டுமா! கடகம், தனுசு, மகர, மீன ராசிக்காரர்களுக்கு தடைபட்டு இருந்த திருமண யோகம் கிடைக்கப் போகிறது. அதேசமயம் 12 ராசியினருக்கும் இந்த குருபெயர்ச்சியால் சில பாதகங்களும் வரவுள்ளன. அதனால் இந்த அதிசார குருப்பெயர்ச்சிக்கு முன்னால் பரிகாரம் செய்து கொள்வதும் நல்லது என்கிறது ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. அதில் சிறப்பானது காலபைரவர் பூஜை.

மகாகால பைரவ பூஜை

காலபைரவர் சிவவடிவங்களில் வேகமானவர். நல்லவர்களுக்கு அச்சம் நீக்குபவராகவும், தீயவர்களுக்கு அச்சம் தரக்கூடியவராகவும் இருக்கிறார். சனீஸ்வரரின் குருவாகவும், ராகு-கேதுவை பூணூலாகவும் அணிந்தவரும் ஆனவர் பைரவர். 12 ராசிகள், எட்டு 8 திசைகள், பஞ்ச பூதங்கள், முக்காலம் ஆகிய அனைத்துக்கும் அதிபதியாக இருப்பவர் காலபைரவர். அதனால் இவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் கிரக தோஷங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதிகம்.

இதனால் 2025 அதிசார குருபெயர்ச்சி 12 ராசியினருக்கு நன்மைகள் தர, அதிர்ஷ்டம் பெற 14-10-2025 செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி நாளில் காலை 9 மணிக்கு மேல் ஈரோடு அவல்பூந்துறை ராட்டைச் சுற்றிபாளையம் பைரவர் ஆலயத்தில் மகாகால பைரவ பூஜை நடைபெற உள்ளது. இந்த பூஜையில் சங்கல்பம் செய்து கொண்டால் உங்கள் அத்தனை பிரச்னைகளும் தீர்ந்து ஆயுள், ஆரோக்கியம், அதிர்ஷ்டம், ஐஸ்வர்யம் பெறலாம் என்பது உறுதி.

கால பைரவ பூஜை

தென்னக காசி என்று போற்றப்படும் இந்த ஆலயம், காசியைப் போலவே மயானத்தை அடுத்துள்ளது. அனுமன் நதியை அடுத்துள்ளது. மேலும் வேறெங்கும் காண முடியாத வகையில் மிகப்பெரிய பைரவர் சிலை 39 அடி உயரத்தில் இங்கு அமைந்துள்ளது. புராண காலத்தில் 64 கோடி யோகினியரும் நவகோடி சித்தர்களும் இங்கு கூடி இந்த மகாகால பைரவரை உபாசித்து தவம் இருந்தார்களாம். பிறகு இந்த ஆலயம் தற்போது ஆதிசித்தன். ஸ்ரீவிஜய் சுவாமிகளுக்கு கிடைத்த உத்தரவால் இங்கு பிரமாண்டமாக எழும்பியுள்ளது. சகல பாவங்களையும் தோஷங்களையும் நீக்கும் இந்த புண்ணிய தலத்தில் ஒரு புனிதமான நாளில் இந்த கால பைரவ பூஜை நடைபெற உள்ளது. அவசியம் கலந்து கொண்டு ஆனந்த வாழ்வைப் பெறுங்கள்.

வரும் அதிசார குருப்பெயர்ச்சிக்கு முன்னால் இந்த பரிகாரத்தை அனைவரும் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதற்கு இந்த 7 காரணங்களும் உள்ளது.

1. 12 ராசியினருக்கும் நன்மைகள் கிடைக்க, உங்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேற இந்த பூஜையில் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

2. இதுவரை தடைபட்டு வந்த மங்கல காரியங்கள் யாவும் விரைவில் நடந்தேற இந்த பூஜை அவசியம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

3. கடன், வழக்கு, திருஷ்டி, எதிரி தொல்லைகள் போன்ற கஷ்டங்கள் நீங்க இந்த பூஜை உதவும்.

4. அதிகாரம், செல்வாக்கு, சொல்வாக்கு, தைரியம் கூட இந்த பூஜை அவசியம்.

5. இழந்தவை யாவும் பெற கால பைரவ பூஜை நிச்சயம் பரிகாரம் தரும்.

6. சகல துறைகளிலும் வளர்ச்சி, முன்னேற்றம் பெறவும் உதவும்.

7. மரண பயம், அகால விபத்து, கொடுமையான நோய்கள், தீவினைகள் நீங்க இந்த பூஜை முக்கியம்.

இப்படி பல்வேறு நலன்கள் அளிக்கும் இந்த ஸ்ரீகால பைரவ பூஜையில் கலந்து கொண்டு வாழ்வும் வளமும் பெறுங்கள்.

கால பைரவ பூஜை

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு பைரவ ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

காஞ்சிபுரம் மாவட்டம், சௌந்தர்யபுரம்: கடன் தீரும், திருமணம் கைகூடும், பலன் தரும் ஸ்ரீபத்மசக்கரம்!

இந்த உலகில் நமக்கு அலைமகளின் அருள் தேவை. செல்வம் என்றால் பணம் மட்டுமல்ல. திருமணம், குழந்தை பாக்கியம், தன தான்ய பெருக்கம், ஆடை ஆபரண சேர்க்கை என அனைத்துமே செல்வம்தான். அத்தனை செல்வங்களையும் நமக்கு அள்ளி... மேலும் பார்க்க

மதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு எப்போது? - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

"மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு வரும் 2026 பிப்ரவரிக்குள் குடமுழுக்கு நடத்தி விடுவோம்" என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதே நேரம், 'த... மேலும் பார்க்க

தேனி, வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்: கண் பிரச்னை தீரும், தொட்டில் கட்டினால் குழந்தை வரம்!

ஈசனும் அம்பிகையும் தேசம் முழுவதும் பல்வேறு தலங்களில் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். அப்படிப்பட்ட சுயம்புத் தலங்களுக்குச் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பானது. நம் பாவங்களை எல்லாம் போக்கக்கூ... மேலும் பார்க்க

கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயில்: உப்பில்லா நிவேதனங்கள்; சரணாகதி அருளும் தென் திருப்பதி பெருமாள்!

திருப்பதி பெருமாளுக்கு வேண்டிக்கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை சென்று தரிசனம் செய்யும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு. ஆனால் சூழ்நிலை காரணமாக எல்லோராலும் ஒவ்வோர் ஆண்டும் பயணப்பட முடிவதில்லை. எனவேதான் பெரியோ... மேலும் பார்க்க

ஈரோடு: கோட்டை பெருமாள் கோயில் புரட்டாசி மாத தேரோட்டம்; வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் | Photo Album

ஈரோட்டில் தேரோட்டம்ஈரோட்டில் தேரோட்டம்ஈரோட்டில் தேரோட்டம்ஈரோட்டில் தேரோட்டம்ஈரோட்டில் தேரோட்டம்ஈரோட்டில் தேரோட்டம்ஈரோட்டில் தேரோட்டம்ஈரோட்டில் தேரோட்டம்ஈரோட்டில் தேரோட்டம்ஈரோட்டில் தேரோட்டம்ஈரோட்டில் ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு அருகே ஔஷதகிரி: மலைமேல் தாயார் வடிவில் பெருமாள் - கல்யாண வரம் தரும் அபூர்வ தலம்

பெருமாள் பல்வேறு திருக்கோலங்களில் தேசமெங்கும் கோயில்கொண்டு அருள்கிறார். அப்படி அவர் அருளும் ஒவ்வொரு தலமும் ஒரு தனிச்சிறப்பு பெற்றது. அப்படி ஓர் ஆலயம் தான் சென்னை - தாம்பரம் வழித்தடத்தில் மறைமலை நகருக்... மேலும் பார்க்க