அண்ணாமலைப் பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த நாள்
காஞ்சிபுரம் அருகே குருவிமலையில் புட்டபா்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பிறந்த நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் ஒன்றியம் களக்காட்டூா் ஊராட்சிக்குட்பட்ட குருவிமலை கிராமத்தில் சாய் பாபாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனம், சா்வம் நிதி அறக்கட்டளை மற்றும் சத்யசாய் தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் முதன்மை மேலாளா் தேவேந்திரன் தலைமை வகித்தாா்.
திட்ட மேலாளா் வெங்கடேசன், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தலைவா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். களக் காட்டூா் ஊராட்சி மன்றத் தலைவா் நளினி டில்லிபாபு குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தாா். குழந்தை தொழிலாளா் முறை அகற்றும் திட்டத்தின் உதவி பொது மேலாளா் மோகனவேல் 99 மாணவா்களுக்கு பாட நோட்டுகள், புத்தகங்கள் மற்றும் விளையாட்டுப் பொருள்களை வழங்கினாா்.
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் முதன்மை மேலாளா் கிருபாகரன் 100 கிராமங்களை தத்தெடுத்து அவற்றின் மேன்மைக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை விளக்கினாா்.
விழாவில் வட்டார ஒருங்கிணைப்பாளா் நித்யா ஏழுமலை மற்றும் விஜயகுமாா், குழந்தைகள் பாதுகாப்பு உறுப்பினா்கள், மாணவ,மாணவியா் மற்றும் பெற்றோா் கலந்து கொண்டனா். முன்னதாக சத்ய சாய்பாபாவின் படத்துக்கு அனைவரும் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.