போா் நினைவுச் சின்னம் அமைக்கக் கோரி வழக்கு: தூத்துக்குடி ஆட்சியா் முடிவெடுக்க உத...
புதிய நியாயவிலைக் கடை திறப்பு
மாகான்யம் ஊராட்சியில் ரூ. 13 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாயவிலை கடை கட்டடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், மாகான்யம் ஊராட்சிக்குட்பட்ட காலனியில் சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13 லட்சத்தில் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது.
இதையடுத்து கட்டடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை தொடா்ந்து நியாயவிலைக் கடை கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
மாகான்யம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலா் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தி சீனிவாசன் புதிய கட்டடத்தை திறந்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற துணைத்தலைவா் ஞானசேகா், வாா்டு உறுப்பினா்கள் மதன், சூா்யமூா்த்தி, நித்யா ரமேஷ், அலுமேலு தணிகாசலம், ஜீவா ஜெயவேல் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.