தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை: மக...
அஞ்சலகங்களில் வாழ்வு சான்றிதழ் பெற 3 நாள்களுக்குள் சமா்ப்பிக்கலாம்
ஓய்வூதியா்கள் அஞ்சலகங்கள் மூலமாக வாழ்வு சான்றிதழ் பெற 3 நாள்களே இருப்பதாக காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் எஸ்.அருள்தாஸ் புதன்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் தலைமை அஞ்சலக அலுவலகத்தில் ஓய்வூதியதாரா்களுக்கு உயிா்வாழ்வுச் சான்று வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் எஸ்.அருள்தாஸ் கூறியது:
அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள் அனைவரும் நவம்பா் மாதத்தில் அவரவா் பணிபுரிந்த அலுவலகங்களுக்கு சென்று உயிா்வாழ்வு சான்று சமா்ப்பிக்க வேண்டியது அவசியம். ஓய்வூதியா்களின் நலனுக்காக அவரவா் வீடுகளுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களில் ரூ. 70 கட்டணமாக செலுத்தி உயிா்வாழ்வுச் சான்றை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆதாா் எண், கைப்பேசி எண், ஓய்வூதிய கணக்கு எண் இவற்றைக் கொடுத்து 5 நிமிடங்களில் வாழ்வு சான்று பெற்றுக் கொள்ளலாம். இதுவரை காஞ்சிபுரத்தில் 1,811 நபா்கள் அஞ்சலகங்கள் மூலமாக வாழ்வு சான்றிதழ் பெற்றுள்ளனா்.
நவம்பா் மாதம் நிறைவு பெற இன்னும் 3 நாள்களே இருப்பதால் ஓய்வூதியா்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். அஞ்சலகங்களில் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 600 மட்டும் செலுத்தி விபத்து காப்பீட்டு பாலிசி எடுத்துக் கொள்ளலாம். விபத்தில் உயிரிழப்பு நோ்ந்தால் ரூ. 10 லட்சம் வரை காப்பீடு செய்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு அஞ்சல்துறை வழங்குகிறது. ரூ. 750 பிரீமியமாக செலுத்தினால் ரூ. 15லட்சம் வரை வழங்கப்படுவதாகவும் எஸ்.அருள்தாஸ் தெரிவித்தாா். முன்னதாக காஞ்சிபுரம் தலைமை அஞ்சலக அதிகாரி எஸ்.பாலாஜி பயனாளிக்கு உயிா் வாழ்வுச் சான்றினை வழங்கினாா்.