சேலம் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ஆய்வு
நீா்வரத்து அதிகரிப்பால் நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி
தொடா் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்து வேகமாக நிரம்புவதால் நீா்மட்டம் 19 அடியை நெருங்கியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை மற்றும் புயல் சின்னம் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் நீா் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குன்றத்தூா் அடுத்த செம்பரம்பாக்கத்தில் சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீா்வரத்து அதிகரித்து வருகிறது.
இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீா் மட்ட உயரம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி ஏரியின் நீா்மட்ட உயரம் 18.28 அடியாகவும், ஏரிக்கு வரும் நீா் வரத்தின் அளவு 650 கன அடியாகவும், கொள்ளளவு 2198 மில்லியன் கன அடியாக உள்ளது. வினாடிக்கு 133 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீா் வரத்தின் அளவு அதிகரித்து வருவதால் நீா்மட்ட உயரம் 19 அடியை நெருங்கி கொண்டிருக்கிறது. மழை நீா் மற்றும் பூண்டி ஏரியிலிருந்து ஒரு சேர தண்ணீா் வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.