செய்திகள் :

ஹாட்ரிக் 100 கோடி: 'இந்த வெற்றிக்கு காரணம் நான் இல்லைங்க’ - நெகிழும் பிரதீப் ரங்கநாதன்

post image

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார், ரோகினி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது 'டுயூட்'.

பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே, டிராகன் பட வெற்றியை தொடர்ந்து டியூட் படமும் ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனையில் ஹாட்ரிக் அடித்திருக்கிறது.

இந்த ஹாட்ரிக் வெற்றி குறித்துப் பேசியிருக்கும் பிரதீப் ரங்கநாதன், "முதல் மூன்று படத்துக்கு ஹாட்ரிக் 100 கோடி வசூல் வெற்றி. இதுக்கு என்ன வாழ்த்தின எல்லாருக்கு ரொம்ப நன்றி. இந்த வெற்றிக்கு காரணம் நான் இல்லைங்க, நீங்கதான்.

நீங்க எனக்குக் கொடுத்த ஆதரவு, அன்புக்கு என்ன உங்க வீட்ல ஒருத்தனாக பார்த்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி. தமிழ் மக்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள். தெலுங்கு, கேரளா என எல்லா மொழி ரசிகர்களுக்கும் எனது நன்றிகள்." என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Ajith Kumar: "அஜித் சாரோட காரை எப்ப வாங்குவீங்க?" - ரசிகரின் கேள்விக்கு நடிகர் ரியோ ராஜ் பதில்

அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆண்பாவம் பொல்லாதது' திரைப்படத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர் ஜே விக்னேஷ் காந்த், ஷீலா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்க... மேலும் பார்க்க

Dude: "காஞ்சனா-வில் சரத்குமார் ஃபேன்; மாரி 2-வில் தனுஷ் ஃபேன்" - வைரல் காஷ்மீர் பெண் ஐஸ்வர்யா பேட்டி

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் திரைக்கு வந்திருக்கிறது 'டியூட்' திரைப்படம். இளைஞர்களை மையமாக வைத்து நகரும் கதை என்பதால் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் இளம் நடிகர்கள் பலர... மேலும் பார்க்க

BRO CODE: ``ரவி மோகன் படத் தலைப்புக்கு இடைக்கால தடை" - டெல்லி நீதிமன்றம் உத்தரவு; பின்னணி என்ன?

நடிகர் ரவி மோகன் நடிப்பில் கராத்தே பாபு, பராசக்தி, ஜெனி ஆகிய படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.இதுமட்டுமல்லாமல், இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் ரவி மோகன், யோகி பாபுவை வைத்து `An Ordinary Man' என்ற பட... மேலும் பார்க்க

"பைசன் வெறும் படமல்ல; அது ஒரு உணர்வு; நமக்குள் ஏற்படும் மாற்றம்" - நடிகை அனுபமா பரமேஸ்வரன் உருக்கம்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பைசன்'. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்நிலையில் இப்படத்தில்... மேலும் பார்க்க