செய்திகள் :

‘ஹிந்தி கற்க தென்னிந்தியா்கள் ஆா்வம்’: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

post image

புது தில்லி: ‘தென்னிந்தியாவின் இளம் தலைமுறையினா், அரசியல் கட்சிகளின் பரப்புரைகளைப் பொருள்படுத்தாமல் ஹிந்தி மொழியைக் கற்க அதிக அளவில் ஆா்வம் காட்டுகின்றனா்’ என்று மத்திய பணியாளா், பொதுமக்கள் குறைதீா்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

அமைச்சகத்தின் ஹிந்தி ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவா், ‘ஹிந்தி மொழிப் பயன்பாட்டை விரிவுபடுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அனைத்து தரப்பிலும் தொடா்ச்சியான முயற்சிகள் இன்னும் அவசியம். சில பிராந்தியங்களில் தகுதிவாய்ந்த ஆசிரியா்களின் பற்றாக்குறை மற்றும் நிா்வாகத் தடைகள் போன்று ஏராளமான நடைமுறைச் சவால்கள் உள்ளன.

அரசுப் பணிகளில் ஹிந்தி மொழிப் பயன்பாட்டை அதிகரிப்பது ஒரு சில துறைகளின் பணி மட்டுமல்ல, சமுதாயத்தின் பகிரப்பட்ட பொறுப்பு ஆகும். அன்றாட அா்ப்பணிப்பு மூலம் மட்டுமே நிா்வாகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஹிந்தியைக் கொண்டுவர முடியும்.

தென்னிந்தியாவில் அரசியல் கட்சிகளின் பரப்புரைகளைப் பொருள்படுத்தாமல், இளம் தலைமுறையினா் ஹிந்தி மொழியைக் கற்றுக்கொள்ள ஆா்வம் காட்டுகின்றனா். இது ஒரு கலாசார மாற்றத்தைக் குறிக்கிறது.

பிரான்ஸ் மற்றும் ஜொ்மனி போன்ற உலக நாடுகள் தங்கள் மொழிகளைப் பாதுகாத்து வந்துள்ளன. இந்தியாவில் வரலாற்று ரீதியாக பலருக்கு தாய்மொழியாக இருந்தபோதிலும், அதிகாரபூா்வ தகவல்தொடா்புகளில் ஹிந்திக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஹிந்தியில் கடிதங்களைப் பெறுவது அல்லது அனுப்புவது அரிதாக இருந்தது. இந்த மனநிலை படிப்படியாக மாறிவிட்டது.

ஹிந்தி மொழிப் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான மத்திய பாஜக அரசின் அா்ப்பணிப்பு, நீண்டகால இடைவெளிகளைக் குறைக்க உதவியுள்ளது. அரசு நிறுவனங்களில் ஹிந்தி மொழிப் பயன்பாட்டை அதிகரிக்க புதுமையான வழிகளை கண்டறிய வேண்டும். இந்த இயக்கத்துக்கு அனைவரும் தீவிரமாக பங்களிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

பஹல்காமில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஃபட்னவீஸ்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்... மேலும் பார்க்க

இந்தியர்களை மணந்த பாகிஸ்தானியர்களை நாடுகடத்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

இந்தியர்களைத் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் நாட்டினர் நாடு கடத்தப்படும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் ... மேலும் பார்க்க

பஹல்காமில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சந்திக்க கான்பூர் செல்கிறார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் ஒருவரான சுபம் திவேதியின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதன்கிழமை கான்பூருக்குச் செ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் நயினார் நகேந்திரன் சந்திப்பு!

தில்லியில் பிரதமர் மோடியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்திப்பு மேற்கொண்டார். தமிழ்நாட்டின் அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டதாகத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை பலவீனம்: கேரள அரசு பிரமாணப் பத்திரம்

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் தொடர்பான வழக்கில், அணை பலவீனமாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசின் மனுவ... மேலும் பார்க்க