விந்து முந்துதல்... தடுக்கும் A, B, C, D, E, F டெக்னிக்! | காமத்துக்கு மரியாதை
ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய வரலாற்றில் முதல்முறை
நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணை முதல் சோதனை ஒடிஸா கடற்கரையில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1,500 கி.மீ. தொலைவுக்கும் அப்பால் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை பொருந்தியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால்(டிஆர்டிஓ) இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனை மூலம், நெடுந்தொலைவு சென்று இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ‘ஹைப்பர்சோனிக் திட்டம்’ இந்திய வரலாற்றில் முதல்முறையாக நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கும்(டிஆர்டிஓ), பாதுகாப்புப் படைக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.