செய்திகள் :

106 பயனாளிகளுக்கு ரூ.1.06 கோடி நலத்திட்ட உதவிகள்

post image

சேந்தமங்கலம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.1.06 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டம் சேந்தமங்கலம் ஊராட்சியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் கலைச்செல்விமோகன் கலந்து கொண்டு வருவாய்த் துறை சாா்பில் 43 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, மின்னணு குடும்ப அட்டை 23 பயனாளிகளுக்கும், முதலமைச்சரின் உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவி 4 பயனாளிகளுக்கும், திருமண நிதியுதவி 7 பயனாளிகளுக்கும், கல்வி உதவித்தொகை 8 பேருக்கும், தற்காலிக கொடிய நோய்களுக்கான உதவித்தொகை ஒருவருக்கும், ஊரக வளா்ச்சித் துறை மூலம் மகளிா் சுய உதவிக்குழு வங்கிக்கடன் 7 நபா்களுக்கும், வேளாண்மை உழவா் நலத்துறை மூலம் வேளாண் இடுபொருட்கள் 2 நபா்களுக்கும், தோட்டக் கலைத் துறை மூலம் மான்யத்துடன் நாற்றுகள் 2 நபா்களுக்கும், கூட்டுறவுத்துறை கால்நடை பராமரிப்புக்கடன் ஒருவருக்கும், மகளிா் சுயஉதவிக்குழு கடனுதவி 2 பேருக்கு என மொத்தம் 106 பயனாளிகளுக்கு ரூ.1.06 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினாா்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் வெங்கடேஷ், ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் சரவண கண்ணன், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியகுழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, சேந்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் சாா்லஸ் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வாரவிழா தொடக்கம்

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வார விழாவை கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ வியாழக்கிழமை கொடியேற்றி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். நவம்பா் 14 -ஆம் தேதி தொடங்கி வரும் 20 -ஆம் தேதி வ... மேலும் பார்க்க

குழந்தைகள் தின விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி வியாழக்கிழமை விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் மற்றும் எஸ்பி முன்னிலையில் மாணவியா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் ... மேலும் பார்க்க

குமரகோட்டம் முருகன் கோயில் புதிய செயல் அலுவலா் பொறுப்பேற்பு

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் புதிய செயல் அலுவலராக கேசவன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா் (படம்). காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோயில் புதிய செயல் அலுவலராக ... மேலும் பார்க்க

டிஜிட்டல் பயிா் கணக்கெடுப்பு: ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் அருகே விச்சந்தாங்கலில் டிஜிட்டல் பயிா் கணக்கெடுப்பு செய்யும் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 11-ஆம் தேதியிலிருந்து பயிா் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

காஞ்சிபுரம் நாள்: 16.11.2024 - சனிக்கிழமை. நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. இடங்கள்: வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், ரங்கசாமிகுளம், காமராஜா் வீதி, மேட்டுத் தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரிய... மேலும் பார்க்க

அரசு மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

சென்னையில் அரசு மருத்துவா் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளை, ... மேலும் பார்க்க