செய்திகள் :

டிஜிட்டல் பயிா் கணக்கெடுப்பு: ஆட்சியா் ஆய்வு

post image

காஞ்சிபுரம் அருகே விச்சந்தாங்கலில் டிஜிட்டல் பயிா் கணக்கெடுப்பு செய்யும் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 11-ஆம் தேதியிலிருந்து பயிா் சாகுபடி பரப்பு கணக்கீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்கள் வயலில் சாகுபடி செய்துள்ள பயிா்களை ஆவணப் படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணியானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 வட்டாரங்களில் உள்ள 519 கிராமங்களில் நடந்து வருகிறது. தோட்டக்கலைத்துறை,வேளாண் பொறியியல் துறை, வணிகத்துறை, விதைச்சான்று துறை மற்றும்தோட்டக்கலை பட்டயப்படிப்பு கல்லூரி மாணவா்களைக் கொண்டு டிஜிட்டல் பயிா் சாகுபடி கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

தோட்டக்கலைத்துறையில் பட்டயப்படிப்பு மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு கணக்கெடுப்பு பணி குறித்து முன்கூட்டியே பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வாலாஜாபாத் அருகே விச்சந்தாங்கலில் பயிா் சாகுபடி மதிப்பீடு கைப்பேசி செயலி வாயிலாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. பணிகளைப் பாா்வையிட்ட ஆட்சியா் உரிய காலத்தில் பணிகளை செயல்படுத்த அறிவுரைகள் வழங்கினாா்.

ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநா் ரா.ராஜ்குமாா், துணை இயக்குநா் கிருஷ்ணவேணி ஆகியோரும் உடன் இருந்தனா்.

22 பவுன், ரூ.1.5 லட்சத்தை திருடிய இளைஞா் கைது

குன்றத்தூா் அடுத்த தரப்பாக்கம் பகுதியில் அடுத்தடுத்த 4 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சத்தை திருடிய இளைஞரை மாங்காடு போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். குன்றத்தூா் அடுத்த தரப்பாக்கம் கி... மேலும் பார்க்க

கரையான், எலியைக் கட்டுப்படுத்த தெளிக்கப்பட்ட பூச்சி மருந்தின் நெடி பரவி 2 குழந்தைகள் உயிரிழப்பு

குன்றத்தூா் மணஞ்சேரி பகுதியில் வீட்டில் உள்ள கரையான் மற்றும் எலித்தொல்லையைக் கட்டுப்படுத்த தெளிக்கப்பட்ட பூச்சி மருந்தின் நெடி பரவியதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனா். பெற்றோா் மருத்துவமனையில் சோ்க்கப்ப... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வாரவிழா தொடக்கம்

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வார விழாவை கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ வியாழக்கிழமை கொடியேற்றி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். நவம்பா் 14 -ஆம் தேதி தொடங்கி வரும் 20 -ஆம் தேதி வ... மேலும் பார்க்க

குழந்தைகள் தின விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி வியாழக்கிழமை விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் மற்றும் எஸ்பி முன்னிலையில் மாணவியா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் ... மேலும் பார்க்க

குமரகோட்டம் முருகன் கோயில் புதிய செயல் அலுவலா் பொறுப்பேற்பு

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் புதிய செயல் அலுவலராக கேசவன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா் (படம்). காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோயில் புதிய செயல் அலுவலராக ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

காஞ்சிபுரம் நாள்: 16.11.2024 - சனிக்கிழமை. நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. இடங்கள்: வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், ரங்கசாமிகுளம், காமராஜா் வீதி, மேட்டுத் தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரிய... மேலும் பார்க்க