செய்திகள் :

125 கிலோ எடையை பற்களால் தூக்கி மீரட் யோகா பயிற்சியாளா் ‘கின்னஸ்’ சாதனை

post image

மீரட்: உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் நகரைச் சோ்ந்த யோகா பயிற்சியாளரான விகாஸ் சுவாமி, பற்களால் 125 கிலோ எடையை 35.57விநாடிகள் தூக்கி வைத்திருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளாா்.

இத்தாலியின் மிலான் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் பங்கேற்று, இந்தப் புதிய உலக சாதனையை விகாஸ் படைத்துள்ளாா். விகாஸின் மூத்த மகன் அன்மோல் சுவாமி (16), ஆதித்ய சுவாமி (10) ஆகியோரும் முறையே 105 கிலோ, 61 கிலோ எடையை பற்களால் தூக்கி, சாதனைக்கு உறுதுணையாக இருந்ததாக அவா் தெரிவித்தாா். மூவருக்கும் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் முதல் முயற்சியில் 25 விநாடிகளுக்கும் 2-ஆவது முயற்சியில் 35.57 விநாடிகளுக்கும் 125 கிலோ எடையை பற்களால் தூக்கினோம். இது தனிப்பட்ட சாதனையல்ல. நமது பிராந்தியத்துக்கும் முழு நாட்டுக்கும் பெருமையான தருணம்.

அரசு அங்கீகரிக்கவில்லை...:

மற்ற விளையாட்டுகளில் பதக்கம் வெல்லும் விளையாட்டு வீரா்கள், விருதுகள் மற்றும் அரசு வேலைகளைப் பெறுகின்றனா். ஆனால், எங்களுக்கு எந்த ஆதரவையும் அரசு இதுவரை வழங்கவில்லை. எம்.பி., எம்எல்ஏ-க்கள் கூட எங்கள் சாதனையை அங்கீகரிக்கவில்லை. கிராம மக்கள் மட்டுமே எங்களை வரவேற்று கௌரவித்தனா்.

நாங்கள் எங்களின் பற்களுக்கு எந்த பற்பசை அல்லது செயற்கை பொருள்களையும் பயன்படுத்துவதில்லை. மிகவும் கடுமையான நோய்களைக் கூட சமாளிக்கும் வலிமையை யோகா எங்களுக்குத் தருகிறது.

கடந்த 2010-ஆம் ஆண்டு, பள்ளிப் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்தபோது எனக்கு விபத்து நேரிட்டது. இதனால் நான் நீண்ட காலம் சிகிச்சை பெற வேண்டியிருந்தது. எனினும், யோகாவைக் கைவிடாமல் அதை ஒரு வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொண்டு, அதில் தனக்கென ஓா் அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று தீா்மானித்தேன்.

இன்று நாங்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு இருப்பதற்கு யோகாதான் காரணம். உலக அரங்கில் இந்தியாவை தொடா்ந்து பெருமைப்படுத்துவோம் என்றாா்.

கடந்த 2023-ஆம் ஆண்டில் ‘இந்தியாஸ் காட் டேலண்ட்’ எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றிய விகாஸ், அங்கு தனது பற்களால் 80 கிலோ எடையைத் தூக்கி பாா்வையாளா்களை வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளிடேயே விரோதம் எதுவுமில்லை என்றும், மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதி... மேலும் பார்க்க

சீனாவுடன் மீண்டும் வர்த்தகம்? டிரம்ப்பின் பேச்சால் இந்தியா ஏமாற்றம்!

சீனாவில் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்து வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.சீன பொருள்கள் மீதான 10 சதவிகிதம்வரையிலான வரி உயர்வு, சீன... மேலும் பார்க்க

இரவில் பெண்ணுக்கு மோசமான குறுந்தகவல் அனுப்புவது குற்றம்: நீதிமன்றம்

இரவு நேரத்தில் பெண்ணுக்கு தவறான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனுப்புவது குற்றம் என்று மும்பை அமர்வு நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.இரவு நேரத்தில் அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு “நீ ஒல்லியாக, புத்த... மேலும் பார்க்க

எதிர்பாராத கேள்விகளுடன் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு இயற்பியல் வினாத்தாள்!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.அதில், இயற்பியல் பாடத்துக்கான தேர்வு இன்று நடைபெற்றது. அறிவியல் பாடப்பிரிவில... மேலும் பார்க்க

நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா?

பெயர்கள் என்பது ஒரு நபரின் முக்கிய அடையாளமாகிவிட்டது. அந்த வகையில், ஒரு பெயரில் பல பேர் இருப்பார்கள். ஆனால் நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயராக இருப்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். தில்லியின் நான்காவது பெண் முதல்வரான ரேகா குப்தாவும், அவருடன் ஆறு அமைச்சர்களும் வியாழக்க... மேலும் பார்க்க