செய்திகள் :

2-வது ஒருநாள்: இலங்கைக்கு 210 ரன்கள் இலக்கு; தொடரைக் கைப்பற்றுமா?

post image

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (நவம்பர் 17) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதலில் பேட் செய்தது.

209 ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூசிலாந்து

மழையின் காரணமாக ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியில் டிம் ராபின்சன் 4 ரன்களிலும், ஹென்றி நிக்கோலஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து, வில் யங் 26 ரன்களிலும், கிளன் பிளிப்ஸ் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால், நியூசிலாந்து 98 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

இதையும் படிக்க: ரவிச்சந்திரன் அஸ்வினிடம் நான் கவனமாக இருக்க வேண்டும்: மூத்த ஆஸி. வீரர்

இந்த நிலையில், மார்க் சாப்மேன் மற்றும் மிட்ச் ஹே ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நியூசிலாந்தின் ஸ்கோரை உயர்த்தியது. மார்க் சேப்மேன் தொடக்கம் முதலே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க் சாப்மேன் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 81 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் மஹீஷ் தீக்‌ஷனா

அதன் பின், களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் (0 ரன்), கேப்டன் மிட்செல் சாண்ட்னர் (6 ரன்கள்), நாதன் ஸ்மித் (0 ரன்), ஈஷ் சோதி (9 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்ச் ஹே 49 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், நியூசிலாந்து அணி 45.1 ஓவர்களின் முடிவில் 209 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இலங்கை தரப்பில் மஹீஷ் தீக்‌ஷனா மற்றும் ஜெஃப்ரி வாண்டர்சே தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அஷிதா ஃபெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும், துனித் வெல்லாலகே மற்றும் சரித் அசலங்கா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: 3 மணி நேரம் வலைப்பயிற்சி; முதல் போட்டிக்கு தயாராகும் கே.எல்.ராகுல்!

210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்குகிறது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் வென்ற இலங்கை அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் விளையாடுகிறது. தொடர் இழப்பை தவிர்க்கும் முனைப்பில் நியூசிலாந்து அணி களம் காண்கிறது.

வங்கதேச டெஸ்ட் தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.வங்கதேச அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும... மேலும் பார்க்க

முதல் போட்டியில் முக்கிய வீரர்கள் இல்லை; இந்திய அணியுடன் இணையும் இளம் வீரர்!

பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ள நிலையில், இந்தியா ஏ அணியில் இடம்பெற்ற இளம் வீரர் இந்திய அணியுடன் இணையவ... மேலும் பார்க்க

3 மணி நேரம் வலைப்பயிற்சி; முதல் போட்டிக்கு தயாராகும் கே.எல்.ராகுல்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டிக்காக இந்திய வீரர் கே.எல்.ராகுல் தீவிரமாக தயாராகி வருகிறார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வருகிற ... மேலும் பார்க்க

ரவிச்சந்திரன் அஸ்வினிடம் நான் கவனமாக இருக்க வேண்டும்: மூத்த ஆஸி. வீரர்

பார்டர் - கவாஸ்கர் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எதிராக கவனமாக விளையாட வேண்டும் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பார்டர் - கவாஸ்கர் டெஸ... மேலும் பார்க்க

4-வது டி20: தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி; மே.இ.தீவுகள் வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி செயிண்ட் லூசி... மேலும் பார்க்க

தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு நாதன் மெக்ஸ்வீனி சரியான தேர்வா? மேத்யூ ஹைடன் பதில்!

இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் மெக்ஸ்வீனி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க சரியான தேர்வா என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பேசியுள்ளார்... மேலும் பார்க்க