கன்னியாகுமரி: தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி
2025-க்குள் போரூர் - பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை!
போரூர் - பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 2025-க்குள் பயணிகள் சேவை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் எக்ஸ் தளப் பதிவில், “சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் வழித்தடம் 4-ல் முல்லைத் தோட்டம் மற்றும் பூந்தமல்லி பணிமனைக்கு இடையில் தரைமட்ட வேறுபாடு (Grade Separator) கட்டுமான பணிகள் நிறைவடைந்தன.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-ல் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 128 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து பூந்தமல்லி பணிமனை வரை 26.1 கி.மீ நீளம் கொண்ட வழித்தடம் 4-ல் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
இதையும் படிக்க: வாட்ஸ்ஆப் ஆடியோவில் முத்தலாக்.. கணவர் மீது மனைவி புகார்!
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகனப் போக்குவரத்தை மேம்படுத்தவும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளின் தொடர்ச்சியாக, இன்று (01.03.2025) முல்லைத்தோட்டம் மற்றும் கரையான்சாவடி நிலையங்களுக்கு இடையே மேம்பாலப் பணிகள் நிறைவுற்று முக்கியமான மைல்கல்லை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எட்டியுள்ளது.
பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் நிலையத்திற்கு ஒரு மோட்டார் டிராலி வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டு, கிரேடு செப்பரேட்டர் கட்டுமானத்திற்காக தொடக்க புள்ளியாக நியமிக்கப்பட்ட தூண் எண். 424-ஐ அடைந்தது. கூடுதலாக, மேல்நிலை உபகரண (OHE) பணிகளுக்கான ஒரு முக்கியமான சாலை மற்றும் ரயில் வாகனம் பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் நிலையத்திற்கு மாற்றப்பட்டது, இது திட்டத்தின் முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான படியை குறிக்கிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், போரூர் மற்றும் பூந்தமல்லி பணிமனை இடையே கட்டுமானப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த வழித்தடத்தை 2025 ஆம் ஆண்டின் இறுதியில் பயணிகள் சேவைக்காக திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.