PR04: பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார்... 'PR04' பட பூஜை | Photo Album
2026-ல் தமிழகத்தை ஆளப்போறோம்.. தவெகவின் போஸ்டரால் பரபரப்பு!
கோவை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் 2026-ல் தமிழகத்தை ஆளப்போறோம் என்ற வாசகத்துடன் கோவையில் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28-ஆம் தேதி சென்னையில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கோவை புறநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாபு தலைமையில், பொதுக் குழுவில் கூட போறோம், தளபதி தலைமையில் 2026 - ல் தமிழகத்தை ஆளப்போறோம் என்று கோவை முழுவதும் பொதுக் குழுவுக்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.
விஜய் தலைமையில் ஆளப்போறோம் என த.வெ.க.வால் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டரால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
நடிகர் விஜய் தொடங்கிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28 அன்று சென்னையில் நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் அண்மையில் வெளியிட்டார்.