செய்திகள் :

``2047-ல் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக இருக்கும்..'' - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

post image

நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த  வெள்ளி விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது  பேசிய அவர், “நெல்லை மண், வீரத்திற்கு பெயர் பெற்றது. ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமாக போராடிய ஏராளமான சுதந்திர போராட்ட வீரர்கள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள்தான். அதில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சுதேசி இயக்கத்தை தொடங்கி நாடு முழுவதும் சுதந்திர போராட்டத்தை எதிரொலிக்க செய்யும் வகையில் சுதேசி கப்பலை விட்டார். இதனால் சுதேசி இயக்கம் நாடு முழுவதும் பரவியது.

விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

அந்த சமயத்தில் சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் வ.உ.சி. பேசிய போது, ’சுதேசி இயக்கம் விஷ்ணுவின் அவதாரம்’. இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறினார். அவர் சனாதன தர்மத்தை பின்பற்றிதான் விஷ்ணுவின் அவதாரம் என்று கூறினார்.  அதேபோல் ஆங்கிலேயர்களை எதிர்த்த வாஞ்சிநாதன், ஆங்கிலேய ஆட்சியாளரை சுட்டுக்கொன்றதுடன்  தன்னுயிரையும் மாய்த்துக்கொண்டார். மகாகவி பாரதியார் தனது பாடல்கள் மூலம் சுதந்திர உணர்வை ஊட்டினார். தற்போது உள்ள இளைஞர்கள் நாட்டின் வரலாற்றையும், அதன் பாரம்பரியத்தையும் உணர வேண்டும்.

ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் உலக பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலையில் இருந்தது. கடந்த 2014-ம் ஆண்டில் 16-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போது 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் 3-வது இடத்தை பிடிக்கும். 2047-ம் ஆண்டு தன்னிறைவு பெற்ற நாடாக மாறியிருக்கும். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ஆராய்ச்சிகளுக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

அறிவுசார் சொத்துகளை உருவாக்குவதில் புதிய ஆராய்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் மாணவர்கள் முன்னெடுக்க வேண்டும்.  கடந்த 2020-ம் ஆண்டில் இந்தியாவில் 22 ஆயிரம் அறிவுசார் சொத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது உலக அளவில் 0.5 சதவீதமாகும். அடுத்த 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது. மக்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் நமது தொழில்நுட்ப வளர்ச்சி இருக்க வேண்டும். சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் தங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட ரோபோடிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் உலகம் முன்னேறி வருகிறது. அதற்கு ஏற்ப நாம் தொழில்நுட்பத்தில் வளர வேண்டும்.  கடந்த 1788-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் இருந்து மெக்காலே தலைமையில் பேராசிரியர் குழு இந்தியாவிற்கு வந்து ஆய்வு செய்தது. இந்துக்களின் பாரம்பரியம், அறிவுசார் சொத்து உள்ளிட்டவற்றை கண்டறிந்து சேகரித்து மொழி பெயர்ப்பு செய்ய ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனிக்கு பரிந்துரை செய்தது. இதில் இந்தியா செழுமையாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

விழாவில் கலந்து கொண்ட மாணவிகள்

இயேசு கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்த மோசே கூறிய அறிவுசார் தகவல்கள் எல்லாம் இந்தியாவில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு கூறப்பட்டவை ஆகும். எனவே, நாம் நம்முடைய பாரம்பரியத்தை பற்றி பெருமைப்பட வேண்டும். நமது அடையாளத்தையும், தனித்தன்மையையும், ஆங்கிலேயர்கள் அழித்துவிட்டனர். கொரோனா காலத்தில் உலக நாடுகள் எல்லாம் தடுப்பூசிகளை கண்டுபிடித்து வியாபாரத்திற்காக பயன்படுத்தினார்கள். ஆனால், நமது நாடு, நமது அறிவுசார் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தடுப்பூசிகளை தயாரித்து பிற நாடுகளுக்கும் கொடுத்து இந்தியாவுக்கே பெருமை சேர்த்தது. தற்போது உலகத்திற்கே வெளிச்சம் கொடுக்கும் வகையில் இந்தியாவின் அறிவுசார் சொத்து உள்ளது.” என்றார்.

``காந்தி திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டார்'' -ஆளுநர் ஆர்.என்.ரவி

நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்... மேலும் பார்க்க

இந்தியாவில் பஞ்சத்தை போக்க அரும்பாடுபட்டவர்... பசுமைப் புரட்சி பகலவன் சி.சுப்பிரமணியம்

இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவர், உணவு மற்றும் விவசாய அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம். அன்றைய காலகட்டத்தில் நிலவிய பஞ்சத்தையும் பசியையும் நீக்க, பசுமைப் புரட்சியை முனைப்புடன்... மேலும் பார்க்க

Doctor Vikatan: AC அறையில் சிலருக்கு அதிகம் குளிர்கிறது; சிலருக்கு வியர்க்கிறது... ஏன்?

Doctor Vikatan:சிலருக்கு ஏசியில் பயங்கரமாகக் குளிர்கிறது என்கிறார்கள். அதே இடத்தில் சிலரோ எனக்கு வியர்க்கிறது என்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை? அவர்கள் பொய் சொல்கிறார்களா அல்லது தோலின் தன்மையைப் ... மேலும் பார்க்க

Grapes: செல்களின் வீக்கத்தைத் தடுக்கும்; புற்றுநோய் செல்களை எதிர்க்கும் திராட்சை!

''உலகின் எல்லா நாகரிக வரலாற்றிலும் இடம்பெற்ற பழம், திராட்சை. எந்தப் பருவத்திலும் கிடைக்கக்கூடிய பழம். வைட்டமின், தாது உப்புக்கள், ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது. கறுப்பு, பச்சை என இரண்டு வகைகள் இருந்தாலும்... மேலும் பார்க்க

கொடி கம்பம் வழக்கில் இப்படி ஒரு தீர்ப்பா? அதிர்ந்துபோன அரசியல் கட்சிகள் | Decode

அரசியல் கட்சிகள் பொது இடங்களில் வைத்திருக்கும் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து இந்த வீடியோவில் அலசப்பட்டிருக்கிறது மேலும் பார்க்க