"இட ஒதுக்கீட்டில் தமிழ்நாடுதான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்"- தெலங்கானா முதல்வர் ரேவ...
22 ஆண்டுகளுக்குப் பிறகு மெரியம் - வெப்ஸ்டர் டிக்ஷனரி! 5,000 புதிய சொற்கள்!
பிரபல ஆங்கில அகராதி தயாரிப்பு நிறுவனமான மெரியம்-வெப்ஸ்டர் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் திருத்தங்களை மேற்கொண்டு 12-வது பதிப்பு புத்தகத்தை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த அகராதியில் புதிதாக petrichor, teraflop, dumbphone மற்றும் ghost kitchen உள்பட 5000 சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மெரியம் - வெப்ஸ்டர் அகராதியின் விற்பனை தொடர்ந்து குறைந்த வருவதற்கு மத்தியில் புதிய சொற்கள் இணைக்கப்பட்டு புதிய அகராதி வெளியிடப்படவுள்ளது. இது வருகிற நவ.18 ஆம் தேதி வெளியிடப்படவுள்ள நிலையில், இந்த அகராதிக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளன.
Petrichor (பெட்ரிச்சோர்) - என்பது சூடான வானிலையைத் தொடர்ந்து மழை பெய்யும் போது அந்த வறண்ட மண்ணில் இருந்து ஏற்படும் ஒருவிதமான நறுமனத்தைக் குறிப்பதாக இந்த அகராதியில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Teraflop (டெராஃபிளாப்)- என்பது கணினியின் வேகத்திறனைக் கணக்கிடும் அளவீட்டுக் கருவியாகும்.
Dumbphones (டம்ப் ஃபோன்ஸ்) - என்பது ஸ்மார்ட் போன் பயன்பாட்டுக்குப் முன்னதாக பயன்படுத்தப்பட்ட பொத்தான் போன்களைக் குறிக்கிறது.
ghost kitchens (கோஸ்ட் கிச்சன்)- என்பது கரோனா போன்ற பெருந்தொற்றின் போது திடீரென உருவான சிறிய கடைகளைக் குறிக்கிறது. இதில், டெலிவரி மட்டுமே கொடுக்கப்படும். மேலும், உட்கார்ந்து சாப்பிடுவது போன்றவை வசதிகள் கிடையாது.
இந்த சொற்கள் மட்டுமின்றி, “cold brew - கோல்ட் பிரியூ,” “farm-to-table - ஃபார்ம் டூ டேபிள்,” “rizz - ரிஸ்,” “dad bod - டாட் போட்,” “hard pass - ஹார்டு பாஸ்,” “adulting- அடல்ட்டிங்”, “cancel culture - கேன்சல் கல்ச்சர்,” “beast mode - பீஸ்ட் மோட்,” “dashcam - டேஸ் கேம்,” “doomscroll - டூம்ஸ்க்ரோல்,” “WFH”மற்றும்“side-eye - சைடு ஐ” போன்ற சொற்களும் அகராதியில் இணைக்கப்பட்டுள்ளன.
WFH (வொர்க் ஃப்ரம் ஹோம் - வீட்டிலிருந்து வேலைப்பார்த்தல்), rizz (ரிஸ் - skill என்றும் கூறலாம்), beast mode (பீஸ்ட் மோட்) போன்ற சொற்கள் மேற்கத்திய மொழிகளைப் போன்று இருந்தாலும், சாதாரணமாகவே தமிழகத்தில்கூட இளைஞர்களால் சமூக வலைதளங்களில் பயன்பாட்டில் உள்ளன.
ஏற்கனவே உள்ள சொற்கள் மற்றும் புதியதாக சேர்க்கப்பட்ட சொற்கள் என 20,000 புதிய சொற்கள் எடுத்துக்காட்டுகளுடன் Merriam-Webster.com இணையத்தில் கிடைக்கின்றன.
அதைத் தவிர்த்து 11-வது பதிப்பிலிருந்து உயிரியல் மற்றும் புவியியல் தொடர்பாக அனைத்து சொற்களும் மெரியம்-வெப்ஸ்டர் அகராதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மெரியம்-வெப்ஸ்டர் தலைவர் கிரெக் பார்லோ கூறும்போது, “கலாமசோ மற்றும் நிக்கோலாய் ரிம்ஸ்கி-கோர்சகோ உள்ளிட்டோரைப் பற்றி யாரும் இனி தேடப்போவதில்லை. அதற்காக அவர் இணையத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
(கலாமசோ - மிச்சிகனில் உள்ள ஒரு நகரம், நிக்கோலாய் ரிம்ஸ்கி-கோர்சகோ - ரஷியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர், இவர் 1908 ஆம் ஆண்டு மரணமடைந்துவிட்டார்.)
நாங்கள் இந்த அகராதியை அழகாகவும், ஆர்வமிகுந்ததாகவும் வடிவமைக்க விரும்புகிறோம். அனைவரும் வேடிக்கையாகவும் ஆராய்ச்சிக்காவும் பயன்படுத்த விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
புத்தக வடிவமைப்பாளர் ஒருவர் கூறுகையில், “பரிசுகளாக, வீட்டு உபயோகப் பொருளாக, பள்ளியில் செல்போன் தடை செய்யப்பட்ட மாணவர்களுக்கு முக்கியமானவைகளாக இந்த அகராதிகள் இருக்கின்றன.
மொழிபெயர்ப்பு அகராதிகளின் விற்பனை குறைந்திருந்தாலும், அவை இன்னும் அழிந்துவிடவில்லை. அகராதிகளில் கலாசாரத்தின் பிரதிபலிப்பாக உள்ளன. இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் லாபத்திற்கும் முக்கியமல்ல என்றாலும், அது இன்னும் எங்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது” என்றார்.