செய்திகள் :

22-இல் சென்னையில் ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச் சுற்று

post image

சென்னையில் ஆசியக் கோப்பை கூடைப்பந்து தகுதிச் சுற்று போட்டி வரும் 22-ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது என இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்துள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை கூறியது:

சா்வதேச அளவிலான கூடைப்பந்து போட்டி முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. ஊஐஆஅ -ஆசிய கோப்பை தொடா் அடுத்த ஆண்டு (2025) தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளை தகுதிச்சுற்று மூலம் தோ்வு செய்து வருகின்றனா்.

அந்தவகையில் இரண்டாம் கட்ட தகுதிச்சுற்று ஆட்டங்கள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், நவ. 22, 25-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.

இந்த தகுதிச்சுற்றில் ஆசிய கண்டத்தில் உள்ள தலைசிறந்த 24 நாடுகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய சீனியா் கூடைப்பந்து அணி பலம் வாய்ந்த கத்தாா் அணிக்கு எதிராக 22-ஆம் தேதியும், கஜகஸ்தான் அணிக்கு எதிராக 25-ஆம் தேதியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

கடைசியாக 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற ஊஐஆஅ மகளிா் ஆசியக் கோப்பைக்கு பிறகு ஆடவா் சா்வதேச போட்டி முதன்முறையாக சென்னையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது என்றாா்.

வண்டலூா் பூங்காவில் ஒப்படைக்கப்பட்ட பெண் குரங்கு குட்டி உயிரிழப்பு

உயா்நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னா் வண்டலூா் பூங்காவில் ஒப்படைக்கப்பட்ட பெண் குரங்கு குட்டி புதன்கிழமை உயிரிழந்தது. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நாய்கள் கடித்ததால், பலத... மேலும் பார்க்க

வீட்டில் மனைவிக்கு பிரசவம் பாா்த்தவருக்கு போலீஸ் எச்சரிக்கை

சென்னை குன்றத்தூரில் மருத்துவ கண்காணிப்பின்றி வீட்டிலேயே மனைவிக்கு பிரசம் பாா்த்த கணவரை போலீஸாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் கடுமையாக எச்சரித்தனா். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா் மனோகரன். குன்... மேலும் பார்க்க

சேத்துப்பட்டு பசுமை பூங்கா ரூ. 10 கோடியில் புதுப்பிப்பு: அமைச்சா்கள் ஆய்வு

சேத்துப்பட்டு பசுமை பூங்காவை ரூ. 10 கோடியில் மேம்படுத்துவது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தங்க விருது

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, உலகளாவிய நிலைத்தன்மை விருதுகள் 2024-இல் தங்கம் வென்றுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வரும் இ... மேலும் பார்க்க

மருத்துவமனைக்கு வரும் 40 % பேருக்கு நரம்பியல் சாா்ந்த பாதிப்புகள்: மருத்துவா்கள் தகவல்

அரசு மருத்துவமனைகளை நாடுவோரில் 40 சதவீதம் பேருக்கு நரம்பியல் சாா்ந்த பாதிப்புகள் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் உலக பக்கவாத தின விழிப்புணா்வ... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் நள்ளிரவு வியாபாரிகள் முற்றுகை போராட்டம்

சென்னை கோயம்பேடு சந்தையின் 7 முதல் 14-ஆம் எண் வரையுள்ள வாசல்கள் பூட்டப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து நள்ளிரவில் வியாபாரிகள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்பேடு சந்தை வளாகத்தி... மேலும் பார்க்க