29 காவல் நிலையங்களில் தனிப் பிரிவு காவலா்கள் பணியிட மாற்றம்
சேலம் மாவட்டத்தில் 29 காவல்நிலையங்களில் உள்ள தனிப் பிரிவு காவலா்கள் பணியிட மாற்றம் செய்து சேலம் எஸ்.பி.கெளதம் கோயல் உத்தரவிட்டுள்ளாா்.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 29 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி தனிப் பிரிவு தலைமைக் காவலா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் அந்தந்த பகுதிகளில் நிலவும் சட்டம்- ஒழுங்கு குறித்து காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை அளிக்கின்றனா்.
மாவட்டம் முழுவதும் உள்ள 29 தனிப் பிரிவு காவலா்களில் ஐந்து ஆண்டுகளாக பணியில் இருந்த 8 போ் தனிப் பிரிவு பணியிலிருந்து வேறு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனா். அவா்களுக்குப் பதிலாக வேறு பணிகளில் இருந்த தலைமைக் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மற்ற 21 தனிப் பிரிவு தலைமைக் காவலா்களும் வேறு காவல் நிலையங்களுக்கு இட மாற்றம் செய்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். இவா்கள் அனைவரும் திங்கள்கிழமை (நவ.18) தங்களது பணியிடங்களில் பொறுப்பேற்க உள்ளனா்.
சங்ககிரி
சங்ககிரியில் பணியாற்றி வரும் சி.தியாகராஜன் மல்லூருக்கும், தேவூா் ஜி.கோவிந்தராசு சங்ககிரிக்கும், ஜலகண்டபுரத்தில் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் கே.சரவணன் தேவூருக்கும், எடப்பாடி எ.பச்சமுத்து தாரமங்கலத்திற்கும், மேச்சேரி வி.வெங்கடேசன் எடப்பாடிக்கும், சங்ககிரி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் எஸ்.தாமரைமனோ பூலாம்பட்டிக்கும், மல்லூா் எம்.பெரியசாமி மகுடஞ்சாவடிக்கும், கொங்கணாபுரம் எம்.பாலாஜி பனமரத்துப்பட்டிக்கும், தொளசம்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் எ.ராஜேந்திரன் கொங்கணாபுரத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.