செய்திகள் :

29 மாவட்டங்களுக்கு சிறப்புத் தொகுப்பு; கோடை உழவுக்கு ரூ.2,000 மானியம்

post image

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் அல்லாத 29 மாவட்டங்களில் நெல் சாகுபடி அதிகரிக்க சிறப்புத் தொகுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று வேளாண் அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டு வரும் அறிவிப்பில்..

கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2,000 மானியமாக வழங்கப்படும்.

30 லட்சம் உழவர்களுக்கு பயிர்க் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரண இழப்பீடு, இறுதிச் சடங்கு செலவு தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

காவிரி படுகை மாவட்டங்களில் குறுவை சாகுபடியை அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

உழவர் நல மையங்கள் வாயிலாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

மலைப்பகுதி விவசாயிகள் முன்னேற்றத்துக்காக சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மானாவரி நிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் கோடை உழவு செய்ய ரூ.2,000 மானியமாக வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் 16.3 லட்சம் ஹெக்டேரில் தோட்டக் கலை பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

2023 - 24ஆம் ஆண்டில் 147 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.3.58 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுளள்து என்று அறிவித்தார்.

மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர். ரஹ்மான் டிஸ்சார்ஜ்!

உடல்நலக் குறைவுக் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மேலும் பார்க்க

திமுக அரசைப் பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதலாம்: விஜய்

திமுக அரசைப் பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதலாம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:”தமிழ்நாடு முழ... மேலும் பார்க்க

’நலமாக இருக்கிறார்’: ஏ.ஆர். ரஹ்மான் உடல்நிலையை விசாரித்த முதல்வர்!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நலமாக இருப்பதாகவும், அவரின் உடல்நிலையை மருத்துவர்களிடம் விசாரித்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில்... மேலும் பார்க்க

ஏ.ஆர். ரஹ்மானுக்கு நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

வேளாண்மையில் காலநிலை மாற்ற சவாலை எதிா்கொள்ள முன்மாதிரித் திட்டம்: வேளாண் செயலா் வ.தட்சிணாமூா்த்தி

காலநிலை மாற்றத்தை எதிா்கொண்டு விவசாயம் செய்ய முன்மாதிரித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை செயலா் வ.தட்சிணாமூா்த்தி கூறினாா். வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து த... மேலும் பார்க்க

1,000 உழவா் நல சேவை மையங்கள்: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்ய 1,000 உழவா் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று மாநில அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவ... மேலும் பார்க்க