செய்திகள் :

காஸாவில் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னும் இஸ்ரேல் தாக்குதல்: 150 பேர் உயிரிழப்பு!

post image

காஸாவில் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின் இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள தாக்குதல்களில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த இரு வாரங்களில் மட்டும் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காஸா ஊடக அலுவலகம் சனிக்கிழமை(மார்ச் 15) தெரிவித்துள்ளது.

கடந்த ஜன. 19-ஆம் தேதி போர் நிறுத்தம் அமலாகிறது என்ற அறிவிப்பு வெளியானது. போர் நிறுத்தத்துக்காக முதல் கட்டமாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தம் மார்ச் முதல் வாரத்தில் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த இஸ்ரேல் முனைப்பு காட்டவில்லை. இதனையடுத்து, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காஸாவின் வடக்கு பகுதியிலுள்ள பீய்ட் லஹியாவில் பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை(மார்ச் 15) வான் வழியாக நடத்திய டிரோன் தாக்குதலில் பத்திரிகையாளர் ஒருவர் உள்பட மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், இஸ்ரேலின் போர்க் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சர்வதேச நீதிமன்றங்கள் உடனடியாக எடுக்க வேண்டும் என்று காஸா ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாசிடோனியாவில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: 50 பேர் பலி!

ஐரோப்பிய தேசமான வடக்கு மாசிடோனியாவில் செயல்பட்டு வந்த இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 50 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 16) அதிக... மேலும் பார்க்க

சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்த டிராகன் விண்கலம்!

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்டுள்ள டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்துள்ளது. இந்த விண்கலம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 16) காலை 10 மணியளவில் சர்வத... மேலும் பார்க்க

கனடா: புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்களுக்கு பதவி!

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அமைச்சரவையில் இந்திய வம்சாவளிப் பெண்கள் இருவருக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ மீது பொதுமக்களுக்கும், ஆளும் லிபரல் கட்ச... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா வான் வழி தாக்குதல்: 24 பேர் பலி!

யேமன் நாட்டில் அமெரிக்க படைகள் வான் வழி தாக்குதலை நிகழ்த்தியுள்ளன. இந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.யேமன் தலைநகர் சனாவில் சனிக்கிழமை(மார்ச் 15) நடத்தப்பட்டுள்ள தாக்குதலில்... மேலும் பார்க்க

இராக்கில் ஐ.எஸ். முக்கிய தலைவா் படுகொலை: அமெரிக்கா

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் இரண்டாம் நிலை தலைவா் அபு காதிஜா, இராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டது தற்போது உறுதியாகியுள்ளது.இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் இராக் பிர... மேலும் பார்க்க

அமெரிக்காவில் இந்திய மாணவியின் விசா ரத்து: அரசிடம் விண்ணப்பித்து தாமாக நாடு திரும்பினாா்

பயங்கரவாதக் குழுவான ஹமாஸை ஆதரித்ததற்காக அமெரிக்காவில் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்ட இந்திய மாணவி, அந்நாட்டு அரசு புதிதாக அறிமுகப்படுத்திய ‘சிபிபி ஹோம்’ செயலி மூலம் விண்ணப்பித்து தாமாக தாயகம் த... மேலும் பார்க்க