சூப்பர் அறிவிப்பு... 7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் பணி: தமிழக அரசு அறிவிப...
Kerala: மருத்துவமனையிலிருந்த உடல் உறுப்பு சாம்பிள்கள் மாயம்; வட மாநில இளைஞர் கைது; என்ன நடந்தது?
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று நோயாளிகளின் உடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் 17 உடல் பாகங்கள் அகற்றப்பட்டன. அந்த உடல் பாகங்களை ஆய்வுக்காக பத்தாலஜி டிப்பார்ட்மெண்டுக்கு அனுப்புவதற்காக பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் பாதுகாப்பாகச் சேகரிக்கப்பட்டன.
உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்ட கண்டெய்னர்களை எடுத்துச் சென்ற ஹவுஸ் கீப்பிங் ஊழியர் அஜய்குமார் அவற்றை பத்தாலஜி டிப்பார்ட்மெண்ட் அருகில் உள்ள மாடிப்படி கட்டில் வைத்துவிட்டு மற்றொரு டிப்பார்ட்மெண்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பிவந்து பார்த்த அந்த கண்டெய்னர்களை காணவில்லை. இதையடுத்து மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அந்தப் பகுதியில் ஆக்கர் பொருட்கள் சேகரிக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் வந்து சென்றதாகவும், அவர்மீது சந்தேகம் உள்ளதாகவும் பத்தாலஜி டிப்பார்ட்மெண்டை சேர்ந்த ஊழியர் ஒருவர் கூறினார். திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் சி.சி.டி.வி காட்சிகளைச் சேகரித்து ஆய்வு செய்தனர்.
மெடிக்கல் காலேஜ் போலீஸார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆக்கர் தொழிலாளி இஸ்வர் சந்திரனைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், பிளாஸ்டிக் வேஸ்டுகள் என நினைத்து கண்டெய்னர்களை எடுத்துச் சென்றதாகவும், திறந்து பார்த்தபோது உடல் உறுப்புகள் இருந்ததைப் பார்த்துப் பயந்து மருத்துவமனை குப்பை மேட்டில் போட்டுச் சென்றதாகத் தெரிவித்தார். இதையடுத்து குப்பை மேட்டிலிருந்து உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. பார்மலின் திரவத்தில் பதப்படுத்தி வைத்ததால் உடற்பாகத்தின் சாம்பிள்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் அலட்சியமாகப் பணி செய்ததாக ஹவுஸ் கீப்பிங் ஊழியரான அஜய்குமார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆக்கர் ஊழியர் ஈஸ்வர் சந்திரனை போலீஸார் இன்று கைது செய்தனர். அத்துமீறி நுழைதல் மற்றும் திருட்டு உள்ளிட்ட பிரிவுகளில் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மருத்துவக் கல்லூரி இயக்குநருக்குச் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks