சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 149 ரன்கள் இலக்கு!
Samayal Super Star: 'சங்குப்பூ பாயாசம், கற்றாழை பிரியாணி..' - சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2 ஃபைனல்ஸ்
அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி சென்னையில் இன்று காலை தொடங்கியது. இந்த இறுதிப்போட்டி மொத்தம் இரண்டு பிரிவுகளாக நடைபெறுகிறது.
எக்ஸோ, கோல்டு வின்னர், சத்யா ஏஜென்சி, அஸ்லின்ஸ் ஸ்வீட்ஸ், நாகா, லலிதா ஜூவல்லரி, மில்கி மிஸ்ட், இந்தியன் ஆயில், சௌபாக்யா கிச்சன் அப்ளையன்சஸ், கீதம் ரெஸ்டாரென்ட் ஆகியவை இணைந்து நிகழ்ச்சியை வழங்குகின்றன.
தமிழ்நாடு முழுவதும் 13 இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் இறுதிக்கட்ட போட்டிக்கு மொத்தம் 42 பேர் தேர்வாகியுள்ளனர்.











இந்த மாபெரும் இறுதிப்போட்டியின் முதல் கட்டமாக முதற்பிரிவில் 22 போட்டியாளர்கள் ஒரு மெயின் கோர்ஸ், ஒரு சைட் டிஷ் மற்றும் ஒரு டெஸர்ட் என மூன்று உணவுகளைச் சமைத்து அசத்தினர். சங்குப்பூ பாயாசம், செலவு ரசம், கற்றாழை பிரியாணி, புரோக்கோளி கேக், மீன் பொளிச்சது, மொசு மொசு வறட்டி, கருஞ்சீரக லட்டு எனச் சமைத்து அரங்கத்தை நறுமணத்தால் நிரப்பினர்.

முதற்பிரிவின் முடிவாக செஃப் தீனா போட்டியாளர்களின் உணவுகளை ருசித்துப் பார்த்து மதிப்பிட்டு வருகிறார். போட்டியாளர்கள் தங்களின் உணவு வகைகளையும் தனித்துவத்தையும் செஃப் தீனாவிடம் விளக்கி வருகின்றனர்.
அடுத்த பிரிவு போட்டியாளர்கள், தங்களது சமையல் திறமையை வெளிப்படுத்துவதற்காக ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks