Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
TNBudget 2025: 'பட்ஜெட்டில் 'ரூ' மாற்றம் எதற்கு?'- முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் எழுந்த சர்ச்சையில், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு அலை தீவிரமாக எழுந்துள்ளது.
தமிழ்ப்பற்றைக் காண்பிக்கும் விதமாக தி.மு.க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அவ்வகையில் இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஆவணத்தில் இந்திய ரூபாய்க்கான ₹ குறியீட்டுக்கு பதில், ரூ எனத் தமிழ் எழுத்து பயன்படுத்தப்பட்டிருந்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்குப் பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

'உங்களில் ஒருவன்' நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் இருக்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அவ்வகையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் 'உங்களில் ஒருவன்' நிகழ்ச்சியில் பட்ஜெட் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார்.
அதில், 'ரூ' குறியீடு மாற்றப்பட்டது குறித்த கேள்விக்கு, "மொழிக் கொள்கையில் நாம எந்த அளவிற்கு உறுதியாக இருக்கோம் என்பதைக் காட்ட பட்ஜெட் தலைப்பில் 'ரூ' குறியீட்டை வைத்திருந்தோம். தமிழைப் பிடிக்காதவங்க, அந்த விஷயத்தை பெரிய செய்தியாக்கிட்டாங்க.
‘ரூ’ என்பது பெரிதானது ஏன்?#TNBudget2025-இல் எல்லாத் திட்டங்களும் எனக்கு நெருக்கமானவைதான் என்றாலும்; சில திட்டங்களை உருவாக்கியது எப்படி என்று பகிர்ந்துகொள்கிறேன்!#UngalilOruvanAnswerspic.twitter.com/oTl0Kcypq3
— M.K.Stalin (@mkstalin) March 16, 2025
ஒன்றிய அரசிடம் பேரிடர் நிதி தாருங்கள், பள்ளிக் கல்வி நிதியை விடுவிங்க என தமிழ்நாடு சார்பாக நூறு கோரிக்கைகள் வைத்திருந்தோம். அதற்கெல்லாம் பதில் சொல்லாதவர்கள், 'ரூ' குறியீடு பற்றிப் பேசுகிறார்கள். அவங்களே பல பதிவுகளில் 'ரூ' வைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். வெளிநாடுகளில்கூட 'Rs' என்றுதான் பயன்படுத்துகிறார்கள். 'ரூ' குறியீட்டை மாற்றியதுதான் இவர்களுக்குப் பெரிய பிரச்னையாகத் தெரிகிறது. மொத்தத்தில் இந்திய அளவில் நம்ம பட்ஜெட்டும் ஹிட், தமிழும் ஹிட்'" என்று பேசியிருக்கிறார்.
மேலும், பட்ஜெட் மீதான விமர்சனங்கள் குறித்து, “ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வந்தால் அதைப் பரிசீலிக்கலாம். நெகட்டிவாக சொல்ல வேண்டும் என்பதற்காகவே சிலர் விமர்சிப்பது, அரசு மீது உள்ள வன்மம் மட்டுமே தெரிகிறது. உருப்படியாக அதில் ஒன்றுமே இல்லை” என்று பதிலளித்திருக்கிறார்.