செய்திகள் :

தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்குவதாக இந்தியா, நியூசிலாந்து அறிவிப்பு!

post image

புதுதில்லி: முன்மொழியப்பட்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதாக இந்தியாவும் - நியூசிலாந்தும் இன்று அறிவித்துள்ளது.

பொருட்கள், சேவைகள் மற்றும் முதலீட்டில் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியாவும் நியூசிலாந்தும் ஏப்ரல் 2010 ல் முதல் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின.

இருப்பினும், ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 2015ல் இந்த பேச்சுவார்த்தை முடங்கியது.

தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மூலம் விரிவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதை அறிவிப்பதில் இரு நாடுகளும் மகிழ்ச்சியடைகின்றன என்று வர்த்தக அமைச்சகம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மார்ச் 16 முதல் நான்கு நாள் பயணமாக இங்கு வந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்தின் வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் டோட் மெக்லே ஆகியோரின் சந்திப்புக்குப் பிறகு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

இதையும் படிக்க: தனது கிளைகளை விரிவுபடுத்தும் கரூர் வைஸ்யா வங்கி!

ஐந்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.93 ஆயிரம் கோடியாக சரிவு!

புதுதில்லி: சென்செக்ஸில் உள்ள முதல் 10 அதிக மதிப்புள்ள ஐந்து நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனம் ரூ.93,357.52 கோடியாக சரிந்தது முடிந்தது. இது உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்குக... மேலும் பார்க்க

தனது கிளைகளை விரிவுபடுத்தும் கரூர் வைஸ்யா வங்கி!

சென்னை: தனியார் துறை துறையைச் சேர்ந்த, கரூர் வைஸ்யா வங்கி ஆந்திரா, கர்நாடகம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தலா ஒன்று என மூன்று புதிய கிளைகளைத் திறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் அதன் ஒட்டுமொத்த... மேலும் பார்க்க

தெலங்கானாவில் வெப்ப அலை எச்சரிக்கையை வெளியிட்ட ஐஎம்டி!

ஹைதராபாத்: இந்திய வானிலை ஆய்வு மையம் (ஹைதராபாத்) தனது வானிலை முன்னறிவிப்பில், தெலங்கானாவில் உள்ள பல மாவட்டங்களில் வெப்ப அலை நிலவக்கூடும் என்ற எச்சரித்துள்ளது.அடுத்த மூன்று நாட்களுக்கு அடிலாபாத், குமுர... மேலும் பார்க்க

அடுத்த மாதம் வட்டி விகிதங்களை மேலும் குறைக்கும் ஆா்பிஐ!

புதுதில்லி: ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். ரிசா்வ் வங்கியிலிருந்து மற்ற வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் (ரெப்போ ரேட்), வங்கி... மேலும் பார்க்க

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 19% உயா்வு

இந்தியாவின் முன்னணி மோட்டாா்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 19 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ... மேலும் பார்க்க

பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் குறைந்த முதலீட்டு வரத்து

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு கடந்த பிப்ரவரி மாதம் 26 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க