Samayal Super Star: தமிழகத்தின் ’சமையல் சூப்பர் ஸ்டார்’ யார்? - மாபெரும் இறுதிப்போட்டி தொடங்கியது!
அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) தொடங்கியது.
எக்ஸோ, கோல்டு வின்னர், சத்யா ஏஜென்சி, அஸ்லின்ஸ் ஸ்வீட்ஸ், நாகா, லலிதா ஜூவல்லரி, மில்கி மிஸ்ட், இந்தியன் ஆயில், சௌபாக்யா கிச்சன் அப்ளையன்சஸ், கீதம் ரெஸ்டாரென்ட் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.

மதுரையில் தொடங்கி தஞ்சாவூர், திருச்சி, ராமதாதபுரம், காரைக்குடி, விழுப்புரம், திருநெல்வேலி, புதுச்சேரி, வேலூர், கோவை, சேலம், தென்சென்னை, வடசென்னை எனத் தமிழ்நாடு முழுவதும் 13 இடங்களில் நடந்து முடிந்த இந்த மாபெரும் சமையல் போட்டி இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சென்னை வடபழனியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியை, செஃப் தீனா, ’கலக்கப் போவது யார்’ பாலா, அவள் விகடன் ஆசிரியர் ச. அறிவழகன், விகடன் குழுமத்தின் விற்பனை பிரிவின் பொது மேளாலர் ஆர்.பாலமுருகன் மற்றும் உதவி பொது மேளாலர் கே.ஜி. சதீஷ்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தனர்.

’கலக்கப் போவது யார்’ பாலா, “ ‘ஆனுவல் லீவு’க்கு அத்தை வீட்டுக்கு போற மாதிரி வருஷா வருஷம் அவள் விகடன் நிகழ்ச்சிகளுக்கு வந்துட்டு போறேன். எனக்கும் விகடனுக்குமான உறவு ஆதார் கார்டும் போன் நம்பர் மாதிரியானது“ என்றார் கலகலக்க வைத்தார்.
அடுத்ததாகப் பேசிய அவள் விகடன் ஆசிரியர் அறிவழகன், ”முதலில் ஆண்கள் தான் சமைத்துக் கொண்டிருந்தனர். நடுவில் தான் அது பெண்களுக்கான வேலையாக மாற்றிவிட்டனர். சமையல் என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆண்களும் இங்குப் போட்டியாளர்களாகக் களமியிருங்கி இருப்பது அதனை உறுதிப்படுத்துகிறது” என்றார்.

செஃப் தீனா பேசுகையில், “உணவே மருந்து என்ற கான்செப்டில் போட்டியாளர்கள் ஒரு மெயின் கோர்ஸ், ஒரு சைட் டிஷ், ஒரு டெஸர்ட் என மூன்று உணவுகளைச் சமைத்துக் காட்சிப் படுத்த வேண்டும்” என்றார்.
தொடக்க விழாவைத் தொடர்ந்து முதற்கட்டமாக 22 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர்.