செய்திகள் :

Cockroach Milk: கரப்பான் பூச்சி பால்தான் எதிர்காலத்தில் ஊட்டச்சத்துக்கான உணவா? ஆய்வுகள் சொல்வதென்ன?

post image

உடற்பயிற்சி, உடல்நலம் குறித்த உரையாடல்களில் தற்போது அடிக்கடி பேசப்படும் சொல், superfood.

சத்துகள் நிறைந்த கீரைகள், பழங்கள் மற்றும் விதைகள் போன்ற உணவுகளை சூப்பர் ஃபுட் என்கின்றனர். இவற்றைச் சாப்பிடுவது நம் உடலுக்கு அதிக பலன்கள் அளிப்பது மட்டுமல்லாமல் டயட்டை சரியாகப் பின்பற்றவும் உதவும்.   

இந்த அதிக சத்துமிக்க உணவுகளின் பட்டியலில் கரப்பான்பூச்சி பாலும் (Cockroach Milk) இடம் பிடிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் உள்ள University of Teramo மற்றும் நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டேமில் உள்ளா Erasmus University Rotterdam சேர்ந்து இந்த ஆய்வுகளை நடத்தியுள்ளன.

Diploptera punctata

சிலருக்கு இது அறுவறுப்பாக இருந்தாலும், அறிவியலாளர்கள் கரப்பான் பூச்சி பால், குறிப்பாக Diploptera punctata என்ற கரப்பான் இனத்திலிருந்து கிடைக்கும் பாலானது மாட்டுப்பாலை விட 3 மடங்கு அதிக சக்தி நிறைந்தது என்கின்றனர். 

இந்த கண்டுபிடிப்பு ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கரப்பான் பூச்சி பால் குறித்து பேச்சுகள் இருந்துவருகின்றன.   

ஆய்வாளர்கள் கரப்பான்பூச்சி பால், அதிக புரதச்சத்து, கொழுப்புச் சத்து, சர்க்கரை கொண்டிருப்பதனால் சத்து நிறைந்த ஆகாரமாகக் கருதுகின்றனர். 

கரப்பான் பூச்சியிலிருந்து வருவதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அதை உண்ண முன்வரமாட்டார்கள் என்றாலும், அதன் ஊட்டச்சத்து மிகுதிக்காகவும் எதிர்காலத்தில் அதிக சத்து வழங்கும் உணவாக நிலைபெறக் கூடும் என்பதனாலும் இந்த ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். 

கரப்பான்பூச்சி பால்

இந்த ஆய்வுகள் தொடக்க நிலையிலேயே இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். மேலும் கரப்பான் பூச்சி பால் உற்பத்தி இன்றளவும் பெரிய அளவில் தொடங்காததால் நாம் இப்போது சந்தைகளில் வாங்கவோ பருகிப் பார்க்கவோ முடியாது. 100 மில்லி பாலுக்காகக் கிட்டத்தட்ட 1000 கரப்பான்களைக் கொல்ல வேண்டியிருக்கும் என்கின்றனர்.

ஒருவேளை எதிர்காலத்தில் இந்த கரப்பான்பூச்சி பால் சூப்பர்மார்கெட்களில் சாதாரணமாக விற்கப்பட்டால் நீங்கள் அதைப் பருக முன்வருவீர்களா என கமென்டில் சொல்லுங்க!

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Samayal Super Star: 'சங்குப்பூ பாயாசம், கற்றாழை பிரியாணி..' - சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2 ஃபைனல்ஸ்

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி சென்னையில் இன்று காலை தொடங்கியது. இந்த இறுதிப்போட்டி மொத்தம் இரண்டு பிரிவுகளாக நடைபெறுகிறது.எ... மேலும் பார்க்க

Samayal Super Star: தமிழகத்தின் ’சமையல் சூப்பர் ஸ்டார்’ யார்? - மாபெரும் இறுதிப்போட்டி தொடங்கியது!

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) தொடங்கியது.எக்ஸோ, கோ... மேலும் பார்க்க

சமைக்கும் கைகளுக்கு பெருமை சேர்க்கும் `சமையல் சூப்பர் ஸ்டார்’ - நாளை மாபெரும் இறுதிப்போட்டி!

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சென்னையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை - மார்ச் 16) நடைபெறவுள்ளது... மேலும் பார்க்க

KFC சிக்கனால் இளம்பெண்ணுக்கு உடல்நலக் குறைவு; ரூ.10,000 நஷ்டஈடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

திருப்பூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கார்த்திகா முருகவேல். பி.காம் பட்டதாரியான இவர் கோவையில் விடுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்தாண்டு மே மாதம் 6-ம் தேதி தன் தோ... மேலும் பார்க்க

லிப்ஸ்டிக் சட்னி டு தொட்டாச்சிணுங்கி கூட்டு- அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்களால் கமகமத்த சென்னை

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் -2் தென் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 11 இடங்களில் நடந்து முடிந்த நிலையில் 12-வது இடமாக தென் சென்ன... மேலும் பார்க்க

Health: தெரியாத கீரை; ஆனால், சாப்பிட வேண்டிய கீரை அது... ஏன் தெரியுமா?

நாம் அறியாத அரிய வகைக் கீரைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றில் ஒன்று சுக்கான் கீரை. மருத்துவக் குணங்கள் நிறைந்த சுக்கான் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. குடல்புண் குணமாகும். மலச்சிக்கல... மேலும் பார்க்க