செய்திகள் :

தங்கத்தேர்கள் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?: அமைச்சர் சேகர்பாபு

post image

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ.31 கோடியில் மதிப்பீட்டில் செய்யப்பட்டு வரும் 4 தங்கத் தேர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பக்தர்களின் நேர்த்திக்கடனுக்காக பயன்பாட்டிற்கு வரும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை திருவல்லிக்கேணி, திருவட்டீஸ்வர சுவாமி திருக்கோயில் திருத்தேர் வெள்ளோட்டத்தில் கலந்து கொண்டு திருத்தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

குரூப் 1 முதன்மைத் தேர்வு: டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு என்ன?

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் உள்ள கோயில்களிள் திருப்பணிகள், பழுதடைந்த திருதேர்களை சரி செய்வது போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், புதிய தேர்கள் கட்டுவது என வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு திருத்தேர்பவனிகள் விமர்சையாக நடைபெற்று வருகிறது.

ரூ.74.51 கோடியில் 110 திருக்கோயில்களுக்கு 114 மரத்தேர்கள், ரூ.16.20 கோடியில் 64 மரத்தேர் மராமத்து பணிகள் உள்ளிட்டவை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 183 திருத்தேர் கோட்டைகள் அமைக்கப்படுகிறது.

ரூ.31 கோடியில் 5 தங்கத் தேர்கள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் பெரியபாளையம் கோயில் தங்கத்தேர் தற்பொழுது பக்தர்களின் நேர்த்திக்கடனுக்காக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இன்னும் 4 தங்கத் தேர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வரும்.

சொல்லப் போனால்... மும்மொழியும் செம்மொழியும் வேண்டாத ஆணியும்!

சிதலமடைந்து உள்ள மரத்தேரை புனரமைத்து அம்மன் வீதி உலா வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மேலும் புதிய தேர் வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்காக ரூ. 76 லட்சம் மதிப்பில் புதிய தேர் அமைக்கும் பணி நடைபெற்று தற்போது பக்தர்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆற்காடு நவாப் தலைமையில் இருக்கக்கூடிய குடும்பத்திலிருந்து நாள்தோறும் கோயிலுக்கு பாலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 1000 ஆண்டு தொன்மையான கோயில்களை புணரமைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.125 கோடி மானியம் வழங்கியுள்ளார் என சேகர்பாபு கூறினார்.

எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

எழுத்தாளர் நாறும்பூநாதன்(64) மறைவுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்(64) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1... மேலும் பார்க்க

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி: மாடு முட்டி இளைஞர் பலி

மதுரை: மதுரை கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டி இளைஞர் ஒருவர் பலியானார். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நா... மேலும் பார்க்க

மேயர் பிரியா தமிழில் தடுமாற்றம் இல்லாமல் பேசுவாரா? சீமான் கேள்வி!

சென்னை மேயர் பிரியா தமிழில் தடுமாற்றம் இல்லாமல் பேசுவாரா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது குறித்து சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:சென்னை மாநகராட்சி பக... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் அரியர் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு!

பாலிடெக்னிக் கல்லூரிரிகளில் படித்து நீண்டகாலமாக நிலுவைப் பாடங்கள் வைத்திருக்கும் முன்னாள் மாணவர்களுக்கு மீண்டும் சிறப்புத் தேர்வு எழுத உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித் த... மேலும் பார்க்க

360 நாட்டுக்கோழிப்பண்ணைகள் நிறுவும் திட்டம்!

சென்னை: பப்பாளி, கொய்யா, எலுமிச்சை செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவிகிதத்தில் மானிய விலையில் வழங்கப்படும், 360 நாட்டுக்கோழிப்பண்ணைகள் நிறுவும் திட்டம் என வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை... மேலும் பார்க்க

வேளாண்மை நிதி நிலை அறிக்கை 2025-2026: முக்கிய புதிய திட்டங்கள்

* ரூ.42 கோடி செலவில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் ஆலோசனைகள் வழங்கிட வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் மூலம் 1000 முதல்விரின் உழவர் நல சேவை மையங்கள். * நெல் உற்பத்தியினை அதிகரித்திட ரூ.1... மேலும் பார்க்க