சூப்பர் அறிவிப்பு... 7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் பணி: தமிழக அரசு அறிவிப...
அண்டை மாநிலத்தில் தேர்வு மையம் - ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம்
ரயில்வே தேர்வு எழுதும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் ரயில்வே தேர்வு வாரியம் விளக்கமளித்துள்ளது.
அதில், ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கான இரண்டாம் கட்டத்தேர்வு அனைவருக்கும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் விண்ணப்பதாரர்களுக்கு முடிந்த அளவு சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சொந்த மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்க முடியாத சூழலில் அண்டை மாநிலங்களில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீட்டுப் பிரிவு தேர்வர்களுக்கு ரயிலில் இலவசமாக பயணிக்க பாஸ் தரப்படும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 18 ஆயிரத்து 799 உதவி லோக்கோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டது.
வீர தீர சூரன் புரமோஷன் பணிகள் துவக்கம்!
அதில், சென்னை மண்டலத்தில் மட்டும் 493 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்காக ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கெனவே முதல்கட்ட கணினி வழித் தேர்வு நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட கணினி முறைத் தேர்வுகள் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்காக தமிழகத்தைச் சேர்ந்த 1,315 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ள நிலையில் அவர்களில் பெரும்பாலான தேர்வர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.