சூப்பர் அறிவிப்பு... 7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் பணி: தமிழக அரசு அறிவிப...
ராணுவத்தில் வேலை வேண்டுமா? - உடனே இணையவழியில் விண்ணப்பிக்கவும்!
ராணுவத்தில் சோ்வதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள இளைஞர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என சென்னை ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை ராணுவ தலைமையகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
அக்னிவீர் பொதுப் பணி, அக்னிவீர் தொழில்நுட்பம், அக்னிவீர் எழுத்தர், ஸ்டோர்கீப்பர் தொழில்நுட்பம், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (பத்தாம் வகுப்பு வகுப்பு தேர்ச்சி), அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (எட்டாம் ஆம் வகுப்பு தேர்ச்சி), சிப்பாய் நிலையிலான தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர், சிப்பாய் நிலையிலான பார்மா, அக்ஸிவீர் பொதுப் பணி (ராணுவ மகளிர் காவல்) ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் கடலூா், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்து புதுச்சேரி மாவட்டம், அந்தமான் மற்றும் நிக்கோபாா் தீவுகளின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆகியோா் தங்களது விண்ணப்பங்களை www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
குரூப் 1 முதன்மைத் தேர்வு: டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு என்ன?
விண்ணப்பதாரா்கள் அக்னிவீரா் பணியிடத்துக்கு தங்கள் தகுதியின் அடிப்படையில் ஒரே நேரத்தில் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். பொது தகுதித் தோ்வு இணையவழியில் தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும். ஐடிஐ, டிப்ளமோ முடித்தவா்கள் மற்றும் என்சிசி தகுதிபெற்ற விண்ணப்பதாரா்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
விண்ணப்பப் பதிவு மாா்ச் 12-இல் தொடங்கி ஏப். 10-இல் முடிவடையும். ஜூன் மாதத்தில் இணைய வழியில் எழுத்துத் தோ்வு நடத்தப்படும். தோ்வுக்கான நுழைவுச் சீட்டுகள் இணைய வழியிலேயே வழங்கப்படும். இணையதளத்தையும், மின்னஞ்சல் பார்த்துவருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரிய வாய்ப்பு... சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பெண் செவிலியா் பணி!
மேலும் தகவலுக்கு, சென்னை புனித ஜாா்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகம் (தலைமையகம்) அல்லது 044-25674924 எனும் தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆட்சேர்ப்பு நடைமுறை முழுமையாக தானியங்கி முறையில், நியாயமான மற்றும் வெளிப்படையான வகையில் நடைபெறுவதால் யாராவது விண்ணப்பதாரர்களை அணுகி அவர்களை தேர்ச்சி பெற அல்லது பணியில் சேர உதவ முடியுமென்று கூறினால், அது மோசடியாகும். அத்தகைய நபர்களிடமிருந்து விண்ணப்பதாரர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சொந்த கடின உழைப்பு மற்றும் போட்டித் தேர்வுக்கு முறையாக தயாராதல் மட்டுமே அவர்களின் தேர்வை உறுதி செய்யும். இதில் இடைத்தரகர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அத்தகைய இடைத்தரகர்கள், முகவர்கள் அல்லது முகமைகளால் பணிநாடுநர்கள் ஈர்க்கப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.