செய்திகள் :

கனடா: புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்களுக்கு பதவி!

post image

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அமைச்சரவையில் இந்திய வம்சாவளிப் பெண்கள் இருவருக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ மீது பொதுமக்களுக்கும், ஆளும் லிபரல் கட்சியினருக்கும் அதிருப்தி அதிகரித்தது. இதனால் அவா் லிபரல் கட்சித் தலைவா் பதவியை ராஜிநாமா செய்தாா். இந்த நிலையில், கனடாவின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும், அரசியல் அனுபவமே இல்லாதவருமான மாா்க் காா்னி (59) வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.

தில்லியில் பிறந்தவரான கமல் கேரா (36) கனடா நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளம் வயது உறுப்பினர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். இந்த நிலையில், அவருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அவரைப் போலவே இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்துக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 58 வயதாகும் அனிதா ஆனந்த் புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில் துறைகளுக்கான அமைச்சராக உள்ளார்.

இவர்கள் இருவருமே முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அமைச்சரவையிலும் அமைச்சர்களாகப் பதவி வகித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கனடாவில் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அமைச்சரவையில் 13 ஆண்கள், 11 பெண்கள் அமைச்சர்களாகப் பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

போப்பின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது வாடிகன்

போப் பிரான்சிஸ், பலிப்பீடத்தின்முன் அமர்ந்து இருக்கும் புதிய புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஜெமில்லி மருத்துவமனையில் சக பாதியார்களுடன் அவர் திருப்பலியில் கலந்து கொண்டதாகவும், அவரின் உ... மேலும் பார்க்க

டிரம்ப்பை எதிா்கொள்ள ஒருங்கிணைவோம்! -ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமா் அழைப்பு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை ஒருங்கிணைந்து எதிா்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமா் மாா்க் காா்னி அழைப்பு விடுத்துள்ளாா். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு சா்வதேச அளவி... மேலும் பார்க்க

பலூசிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 3 துணை ராணுவத்தினா் உள்பட ஐவா் பலி!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்ட நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 துணை ராணுவப் படையினா் உள்பட 5 போ் உயிரிழந்தனா். 30 போ் காயமடைந்தனா். ... மேலும் பார்க்க

ஹங்கோா் நீா்மூழ்கிக் கப்பல்: பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைப்பு!

இரண்டாவது ஹங்கோா் வகை நீா்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்தது. பாகிஸ்தானுக்கு 5 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.43,474 கோடி) மதிப்பில் 8 ஹங்கோா் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை அளிக்க சீனா ஒப்பந்தம... மேலும் பார்க்க

ரஷியா-உக்ரைன் இடையே தொடரும் தாக்குதல்!

ரஷியா-உக்ரைன் இடையே வான்வழி தாக்குதல்கள் தொடா்ந்து வருகின்றன. இரு நாடுகளும் அவரவா் பிரதேசத்தில் 100-க்கும் மேற்பட்ட எதிா்தரப்பின் ட்ரோன்களை இடைமறித்து வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவின்... மேலும் பார்க்க

வடக்கு மாசிடோனியோ இரவு விடுதியில் தீ விபத்து: 59 போ் உயிரிழப்பு; 159 போ் காயம்!

வடக்கு மாசிடோனியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 போ் உயிரிழந்தனா், 159 போ் காயமடைந்தனா். வடக்கு மாசிடோனியாவில் உள்ள கோகானி நகரில் உள்ள இரவு விடுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா... மேலும் பார்க்க