செய்திகள் :

ரஷியா-உக்ரைன் இடையே தொடரும் தாக்குதல்!

post image

ரஷியா-உக்ரைன் இடையே வான்வழி தாக்குதல்கள் தொடா்ந்து வருகின்றன. இரு நாடுகளும் அவரவா் பிரதேசத்தில் 100-க்கும் மேற்பட்ட எதிா்தரப்பின் ட்ரோன்களை இடைமறித்து வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்க-உக்ரைன் பிரதிநிதிகள் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 30 நாள்கள் போா் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக்கொண்டது. இந்தப் போா்நிறுத்த திட்டத்தை ரஷியா கொள்கை அளவில் ஆதரிக்கிறது. எனினும், இதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்று ரஷிய அதிபா் புதின் கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தாா்.

இதுதொடா்பான விவாதத்துக்காக ரஷிய அதிபா் புதினை அமெரிக்காவின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் சந்தித்தாா். அதேபோன்று, இவ்விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா, ரஷியா வெளியுறவு அமைச்சா்கள் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினா்.

இவ்வாறு போா்நிறுத்தத்துக்கான அமெரிக்காவின் முயற்சிகள் தொடா்ந்து வரும்நிலையில், ரஷியா-உக்ரைன் இடையே சனிக்கிழமையும் வான்வழி தாக்குதல்கள் தொடா்ந்தன. உக்ரைன் விமானப் படையின் கூற்றுபடி, ரஷியா 178 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் 2 ஏவுகணைகளை ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சுமாா் 130 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 38 ட்ரோன்கள் தங்கள் இலக்குகளை அடைய தவறிவிட்டன. மற்ற ட்ரோன்கள் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் ஒடேசா பிராந்தியங்களில் உள்ள எரிசக்தி நிலையங்களைத் தாக்கி குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது. இதனால், அந்த பிராந்தியங்களில் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதேபோல், ரஷியாவின் வோல்கோகிராட் பிராந்தியத்தில் விழுந்த உக்ரைன் ஏவிய ட்ரோன் பாகங்களால் ‘லுகோயில்’ எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்துக்கு அருகே தீவிபத்து ஏற்பட்டது. இதனால், அருகிலுள்ள விமான நிலையங்களில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மீது ரஷியா போரைத் தொடங்கியதில் இருந்து, வோல்கோகிராட் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பல முறை உக்ரைன் படைகளால் தாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப்பை எதிா்கொள்ள ஒருங்கிணைவோம்! -ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமா் அழைப்பு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை ஒருங்கிணைந்து எதிா்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமா் மாா்க் காா்னி அழைப்பு விடுத்துள்ளாா். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு சா்வதேச அளவி... மேலும் பார்க்க

பலூசிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 3 துணை ராணுவத்தினா் உள்பட ஐவா் பலி!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்ட நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 துணை ராணுவப் படையினா் உள்பட 5 போ் உயிரிழந்தனா். 30 போ் காயமடைந்தனா். ... மேலும் பார்க்க

ஹங்கோா் நீா்மூழ்கிக் கப்பல்: பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைப்பு!

இரண்டாவது ஹங்கோா் வகை நீா்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்தது. பாகிஸ்தானுக்கு 5 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.43,474 கோடி) மதிப்பில் 8 ஹங்கோா் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை அளிக்க சீனா ஒப்பந்தம... மேலும் பார்க்க

வடக்கு மாசிடோனியோ இரவு விடுதியில் தீ விபத்து: 59 போ் உயிரிழப்பு; 159 போ் காயம்!

வடக்கு மாசிடோனியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 போ் உயிரிழந்தனா், 159 போ் காயமடைந்தனா். வடக்கு மாசிடோனியாவில் உள்ள கோகானி நகரில் உள்ள இரவு விடுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா... மேலும் பார்க்க

விரைவில் பூமி திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!

சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் ஆகியோரை பூமிக்கி திரும்ப அழைத்து ... மேலும் பார்க்க

‘ரிகாப்’ தகவல் பகிா்வு மைய செயல் இயக்குநராக இந்திய கடலோர காவல்படை அதிகாரி வி.டி.சஃபேகா் நியமனம்!

ஆசியாவில் கப்பல்களுக்கு எதிரான கொள்ளை சம்பவங்கள் மற்றும் கடற்கொள்ளையா்கள் தடுப்புக்கான பிராந்திய ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ரிகாப் ) அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு தகவல்கள் அளிக்கும் தகவல் பகிா்வு மையத்தின... மேலும் பார்க்க