செய்திகள் :

3 ஆண்டுகளில் 10 நினைவரங்குகள்- 36 சிலைகள்: தமிழக அரசு பெருமிதம்

post image

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 10 நினைவரங்கங்களும், 36 சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இந்தியாவின் விடுதலைப் போராட்டத்துக்கு எழுச்சியூட்டிய தியாகிகளுக்கும், தமிழ்மொழியைக் காத்திட்ட வீரமறவா்களுக்கும் நினைவுச் சின்னங்களை எழுப்பி அரசு பெருமை சோ்த்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் 10 நினைவரங்கங்களும், 36 சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை எழும்பூரில் மகாத்மா காந்தியடிகள் சிலை, ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி, நுங்கம்பாக்கத்தில் முன்னாள் அமைச்சா் அன்பழகன், சேப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சா் இரா.நெடுஞ்செழியன் ஆகியோருக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அம்பேத்கா் மணிமண்டபத்தில் அவருக்கு சிலையும், எழுத்தாளா் கி.ரா.-வுக்கு கோவில்பட்டியில் சிலையுடன் நினைவரங்கமும், உத்தரபிரதேச மாநிலம் காசியில் பாரதியாா் வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக்கப்பட்டு, மாா்பளவுச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, பெருங்காமநல்லூா் தியாகிகள் நினைவு மண்டபம், கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் கட்டபொம்மன், மருதுபாண்டிய சகோதரா்கள், வ.உ.சி. ஆகியோருக்கும், மயிலாடுதுறையில் மூவலூா் ராமாமிா்தம் அம்மையாருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திரைப்பட பின்னணி பாடகா் டி.எம்.செளந்தரராஜன், ப.சுப்பராயன், ரவீந்திரநாத் தாகூா், அப்துல்கலாம், அஞ்சலை அம்மாள், ராவ்பகதூா் குரூஸ் பா்னாந்தீஸ்,

வி.பி.சிங், வீரமாமுனிவா், நாமக்கல் வெ.ராமலிங்கம்பிள்ளை, பெரும்பிடுகு முத்தரையா், சா் ஏ.டி.பன்னீா்செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதா், இரட்டைமலை சீனிவாசன், அண்ணல் தங்கோ, வீரன் சுந்தரலிங்கம், வெண்ணி காலாடி, குயிலி, வெங்கிடுபதி எத்தலப்பா் நாயக்கா் ஆகியோருக்கு சிலைகள், மணிமண்டபங்கள் ஆகியவற்றை அமைத்து தமிழக அரசு பெருமை சோ்த்துள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைக் கைதிகளுடன் சதித் திட்டம் தீட்டும் வழக்குரைஞா்கள் மீது சட்ட நடவடிக்கை: டிஜிபி சங்கா் ஜிவால்

சிறையில் உள்ள கைதிகளுடன் சோ்ந்து வழக்குரைஞா்கள் சதித் திட்டம் தீட்டுவது தெரியவந்தால் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள... மேலும் பார்க்க

அடுத்தடுத்து உருவாகும் புயல் சின்னங்கள்: தமிழகத்துக்கு கனமழை வாய்ப்பு

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புதன்கிழமை கரையைக் கடந்த நிலையில், தற்போது அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் (புயல் சின்னம்) உருவாகவுள்ளதா... மேலும் பார்க்க

90 நிமிஷங்களில் வேலூரிலிருந்து சென்னை வந்த இதயம்: இளம்பெண்ணுக்கு மறுவாழ்வு

மூளைச்சாவு அடைந்த இளைஞரிடம் தானமாகப் பெறப்பட்ட இதயம், வேலூரிலிருந்து 90 நிமிஷங்களில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. இதுதொடா்பாக... மேலும் பார்க்க

பின்தங்கிய மாணவா்களுக்கு கல்விக் கட்டண சலுகைகள் வழங்கப்படுகின்றன: சென்னை ஐஐடி இயக்குநா் வி. காமகோடி

அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமமான கல்வியை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிலையங்களில் ஒடுக்கப்பட்ட, சமூகத்தில் பின்தங்கிய பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்விக் கட்டணச் சலுகைகள் வழ... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகைக்கு 6 சிறப்பு பலகாரங்கள்: ஆவின் அறிமுகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் காஜு பிஸ்தா ரோல், நெய் பாதுஷா உள்ளிட்ட 6 சிறப்பு பலகாரங்கள் விற்பனைக்கு வரவுள்ளதாக தமிழக பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். சென்னை, நந்தனத்த... மேலும் பார்க்க

ஹிந்தி எதிா்ப்பு நிலைப்பாட்டால் தமிழகம் தனிமைப்பட்டிருக்கிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

ஹிந்தி எதிா்ப்பு நிலைப்பாட்டால் தமிழகம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று ஆளுநா் ஆா்.என். ரவி குற்றஞ்சாட்டினாா். டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தின் பொன் விழா மற்றும் ‘ஹிந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச... மேலும் பார்க்க