Viduthalai Part 2: ``விருப்பு வெறுப்பில்லாமல் ராஜா சார் செய்த செயல்... " - வெற்ற...
`3 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு கால அளவு நீட்டிப்பு!' - சுற்றுச்சூழல் அமைச்சகம் பதில்
நேற்று முதல் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. அந்தத் தொடரில் நேற்று மயிலாடுதுறை எம்.பி சுதா, "கடந்த ஐந்து ஆண்டுகளில், மயிலாடுதுறை, தஞ்சாவூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் எத்தனை ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது?
கடந்த ஐந்து ஆண்டுகளில், ஹைட்ரோ கார்பன், எரிவாயு ஆய்வு போன்ற திட்டங்களுக்கு தடையில்லா சான்றிதழ் அல்லது சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டு இன்னும் அனுமதி கிடைக்காமல் இருக்கும் திட்டங்கள் எத்தனை?
டெல்டா மாவட்டங்களை 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக' அறிவிக்கவும், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு எடுப்பதை தடுக்கவும் எதாவது திட்டம் உள்ளதா?"
ஆகிய கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், "கடந்த ஐந்து ஆண்டுகளில், டெல்டா மாவட்டங்களில் புதியதாக எந்தவொரு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கும் மத்திய சுற்றுச்சூழல் துறையால் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், இந்த ஐந்து ஆண்டுகளில் அமைச்சகம் ஏற்கனவே இருக்கும் மூன்று திட்டங்களின் கால அளவை நீட்டித்துள்ளது.
ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஒரு திட்டம், வேதாந்தா நிறுவனங்களின் இரண்டு திட்டத்திற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் அனுமதி கேட்கப்பட்டு, ஆனால், அமைச்சக்கத்தால் அனுமதி கொடுக்கப்படாமல் இருக்கின்றது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டம், 1986-ன் கீழ், மத்திய சூற்றுச்சூழல் அமைச்சகம், மாநில அரசின் பரிந்துரையின் பெயரில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் அல்லது சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதி என குறிப்பிட்ட இடங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும்.
ஆனால், இதுவரை அப்படி எந்தவொரு பரிந்துரையும் தமிழ்நாடு அரசிடம் இருந்து எங்களுக்கு வரவில்லை" என்று கூறியுள்ளது.