அசாம், திரிபுராவில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யும் வேதாந்தா குழுமம்!
300 நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்த பிரான்ஸ் மருத்துவர்!
சிகிச்சைக்காக வந்த 300 பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, முன்னாள் பிரான்ஸ் அறுவைசிகிச்சை மருத்துவர் மீது வழக்குத் தொடரப்பட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரான்ஸ் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்த 300 பேரில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது. வழக்கு விசாரணை ஆவணங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக மிக மோசமான குற்றச்செயலில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்கள் அடைந்த காயங்களை ஆற்ற முடியாது என்று ஒப்புக்கொள்வதாக, மருத்துவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
விசாரணை தொடங்கிய முதல் நாளில், நீதிமன்றத்தில் பேசிய டாக்டர் ஜோல் லே நான் மிகவும் அறுவறுக்கத்தக்க செயல்களை செய்துள்ளேன் என்று கூறியிருக்கிறார்.