ஆஸி. - தெ.ஆ. போட்டி ரத்தானால் அரையிறுதிக்கு தகுதிபெறுவதில் சிக்கல்!
வாடிகனில் குவிந்த மக்கள்.. போப் பிரான்சிஸ் நலனுக்காக பிரார்த்தனை
வாடிகன் சிட்டி : போப் பிரான்சிஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், வாடிகன் சதுக்கத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவர் உடல் நலன் பெற வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
88 வயதாகும் போப் பிரான்சிஸ், நிமோனியா பாதித்து மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு 11 நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலையில் லேசான முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவமனை செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
திங்கள்கிழமை மாலை முதல் வாடிகன் சதுக்கத்தில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள், மிகவும் குளிரான மற்றும் மழை கொட்டும் இரவையும் பொருட்படுத்தாமல், போப் பிரான்சிஸ் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.
இருப்பினும், நினைவுச்சின்ன சதுக்கத்தில் கூடியிருந்த மக்களின் மனநிலை பெரும்பாலும் சோகமாகவே இருந்தது. அங்குக் கூடியிருந்த சுமார் 4,000 பேரில் பலர் பிரான்சிஸின் இறுதி நாள்களாக இது இருக்கக் கூடும் என்று கருதினர்.