இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைமை செய்தித் தொடர்பாளர் கொலை!
4-வது டி20: தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி; மே.இ.தீவுகள் வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி செயிண்ட் லூசியாவில் உள்ள டேரன் சம்மி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் பேட் செய்தது.
இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஜேக்கோப் பெத்தல் அதிகபட்சமாக 32 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக பில் சால்ட் 55 ரன்களும், கேப்டன் ஜோஸ் பட்லர் 38 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: திலக் வர்மாவுக்கு 3-வது இடத்தை விட்டுக்கொடுக்கிறாரா சூர்யகுமார் யாதவ்?
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அல்ஸாரி ஜோசப் மற்றும் ராஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி, இங்கிலாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான எவின் லீவிஸ் 31 பந்துகளில் 68 ரன்களும் (4 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்), சாய் ஹோப் 24 பந்துகளில் 54 ரன்களும் (7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, கேப்டன் ரோவ்மன் பௌவல் 38 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் ரிஹான் அகமது 3 விக்கெட்டுகளையும், ஜான் டர்னர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க:இந்தியாவின் மிகப் பெரிய கவலை கௌதம் கம்பீர்தான்: முன்னாள் ஆஸி. கேப்டன்
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்து தொடரை இழந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் தற்போது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சாய் ஹோப் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.