செய்திகள் :

41 வயது... 41 பந்தில் சதம்... ஏபிடி வில்லியர்ஸுக்கு குவியும் வாழ்த்துகள்..!

post image

தென்னாப்பிரிக்க சாம்பியன்ஸ் அணியின் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் 41 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் டபிள்யூசிஎல் (லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் ) தொடரில் விளையாடி வருகிறார்கள்.

இந்தத் தொடரில் நேற்று இரவு தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணியும் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியும் மோதின.

முதலில் பேட்டி செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 152/6 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக முஸ்டர்ட் 39 ரன்கள் எடுத்தார்.

தென்னாப்பிரிக்கா சார்பில் பர்னல், தஹிர் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

அடுத்ததாக பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 153 ரன்கள் எடுத்து அபாரமாக வென்றது.

இதில் தொடக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் 51 பந்துகளில் 116 ரன்கள் குவித்து அசத்தினார். அதில் 15 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்தப் போட்டியில் 41 பந்துகளில் சதம் அடித்தார். அவருக்கு வயதும் 41 என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் அவரைக் கொண்டாடி வருகிறார்கள்.

ஏற்கெனவே, ஏபிடி வில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

South African Champions team player AB de Villiers scored a century off 41 balls.

பும்ரா தோற்றுவிட்டார், விரைவில் ஓய்வை அறிவிக்கலாம்: முன்னாள் இந்திய வீரர்

இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா விரைவில் ஓய்வை அறிவிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் க... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: இந்தியா- பாக். இடையே 3 போட்டிகள்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் 3 முறை நேருக்குநேர் சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் ஆரம்பமாகும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவு... மேலும் பார்க்க

முதல் இன்னிங்ஸில் 669 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து; 2-வது இன்னிங்ஸில் இந்தியா திணறல்!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 669 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடை... மேலும் பார்க்க

கடினமான சவாலுக்கு தயாராகுங்கள்..! இங்கிலாந்து அணியை எச்சரித்த ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸ்திரேலியாவில் தட்டையான ஆடுகளம் இருக்காதென இங்கிலாந்து அணிக்கு ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது. 2-1 என தொடரில் முன... மேலும் பார்க்க

பேட்டிங் செய்வது இன்று மிகவும் எளிதாகிவிட்டது; கெவின் பீட்டர்சன் கூறுவதன் காரணம் என்ன?

டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் செய்வது இன்று மிகவும் எளிதாகிவிட்டதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட்... மேலும் பார்க்க

மான்செஸ்டர் டெஸ்ட்: 173 பந்தில் 1 முறை மட்டுமே வேகமாக (140கி.மீ./மணி) பந்துவீசிய பும்ரா!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் இந்தியாவின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா வேகமாக (140கி.மீ./மணி) பந்துவீசாதது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டர்சன் - டெண்ட... மேலும் பார்க்க