செய்திகள் :

5 ஆண்டுகளில் ரூ.10 லட்ச கோடி கடனைத் தள்ளுபடி செய்த பாஜக அரசு... யாருடையது தெரியுமா? - கெஜ்ரிவால்

post image
டெல்லி தேர்தல் அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது. தற்போது நடந்துவரும் தேர்தல் பிரசாரத்தில் பாஜக ஆம் ஆத்மியை சாடுவதும், ஆம் ஆத்மி பாஜக மேல் குற்றம் சுமத்துவதும் அதிகமாகவும், பரபரப்பாகவும் நடந்துவருகிறது.

இந்த நிலையில், இன்று காலை ஆம் ஆத்மி கட்சியில் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில், 'இன்று மதியம் மிக மிக மி முக்கிய விஷயம் குறித்து செய்தியாளர் சந்திப்பு' என்று பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று மதியம் 2 மணிக்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, "டெல்லி மக்கள் முன்பு இரண்டு மாடல்கள் தற்போது உள்ளன. ஒன்று மக்களின் பணம் மக்களுக்கே செல்லும் கெஜ்ரிவால் மாடல். இன்னொன்று, மக்கள் பணம் தங்களது பணக்கார நண்பர்களுக்குச் செல்லும் வகையிலான பாஜக மாடல். இதில் எந்த மாடல் வேண்டுமென்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

கெஜ்ரிவால் மாடலா; பாஜக மாடலா?!

ஆம் ஆத்மி அரசால் ஒவ்வொரு மாதமும் டெல்லி மக்கள் 25,000 ரூபாய் வரையில் பலனடைகிறார்கள். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தால், அத்தனை நலத்திட்டங்களையும் நிறுத்திவிடும். காரணம், அந்தத் திட்டங்கள் அனைத்தும் அவர்களது மாடலுக்கு எதிரானது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்தியை ஆளும் பாஜக அரசு 400-500 பேருடைய ரூ.10 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. அந்த 400 - 500 பேரும் ஒருவகையில் பாஜக அரசின் பணக்கார நண்பர்கள் ஆவார்கள்" என்று பேசியுள்ளார்.

Delhi Election: Micro management வியூகம்; பிரசாரத்தில் நட்சத்திரங்கள்; அனல் பறக்கும் டெல்லி தேர்தல்!

டெல்லி சட்டமன்றத் தேர்தல்!இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பரபரப்பாகக் கவனிக்கப்படும் தேர்தலில் ஒன்று டெல்லி சட்டமன்றத் தேர்தல். 70 தொகுதிகளில் 36 இடங்களை வெல்லும் கட்சி, டெல்லி சட்டமன்றத்... மேலும் பார்க்க

`Vengaivayal இளைஞர்களை 8 மணி நேரம் Mental torture பண்ணாங்க!' - CPM Kavi varman

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது குற்றம்சாட்டுகிறது சிபிசிஐடி போலீஸ். ஆனால் அந்த குற்றச்சாட்டு பொய் என்கிறார் சிபிஎம் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ... மேலும் பார்க்க

2026 தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய ஸ்டாலின்? | எடப்பாடி Vs டி.ஆர்.பி.ராஜா Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோவில்,* குடியரசு தினம்: கொடியேற்றிய ஆளுநர்.* கேரளா: ஆளுநர் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் மயங்கிய காவல் ஆணையர்.* ஆளுநர் மாளிகையில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்த ஜெயக்குமார், H.ர... மேலும் பார்க்க

தூது போன 'இலை' தரப்பு வாரிசு, வெயிடிங்கில் வைத்த Amit Shah! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,குடியரசு தின உரையில் ஆளும் திமுகவை கடும் அட்டாக் செய்த ஆளுநர் ஆர்.என் ரவி. அதே நேரத்தில் இளம் அமைச்சர் மதிவேந்தன் மூலமாக தக் லைப் கொடுத்த மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம், அமித்... மேலும் பார்க்க

``கங்கையில் நீராடினால் வறுமை நீங்கிடுமா?" - அமித் ஷாவை சாடிய கார்கே; பாஜக-வின் ரியாக்சன் என்ன?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு கங்கையில் புனித நீராடியதைத் தொடர்த்து, ``கங்கையில் நீராடினால் வறுமை நீங்கிடுமா?" என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விம... மேலும் பார்க்க

Vijay: 'திமுக ஒரு கொத்தடிமை; விஜய் எங்களுக்கு எதிரி அல்ல!' - ஜெயக்குமார் பரபர

முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது அவர், 'விஜய் எங்களுக்கு எதிரி அல்ல!' என்றும் பேசியிருக்கிறார்.Minister Jayakumar திமுகவை விமர்சித்துப் பேசிய ஜெயக்குமா... மேலும் பார்க்க