'5 வகையான நண்பர்கள் உங்களுக்கு இருக்க வேண்டும்' - உங்க நண்பர் இதில் எந்த ரகம்? | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
நண்பன் என்றாலே நல்லவன்தான் என்பது நிஜ வாழ்வில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. சில நண்பர்களால் நாம் வாழ்வில் முன்னேறிச் செல்கிறோம், ஒரு சில நண்பர்களால் (பேருக்கு மட்டும்) நாம் வாழ்வில் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
ஐந்து வகையான நண்பர்கள் உங்களைச் சுற்றி இருக்க வேண்டும். எப்படிப்பட்ட நண்பர்கள்? பார்ப்போம் வாருங்கள்..
1. The Loyal Friend: விசுவாசமான நண்பர்:
உங்கள் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் சரி, இந்த நண்பர் எப்போதும் உங்களுக்காக இருப்பார். உங்கள் நல்ல நேரங்களிலும் சரி, கெட்ட நேரங்களிலும் சரி, நிபந்தனையற்ற ஆதரவை எப்போதும் உங்களுக்குத் தருவார்.
உங்களுக்குத் தெரிந்த ஒருவர் உங்களுக்கு நெருக்கமான ஒருவர் மிகக் கடினமான சூழ்நிலையில் உங்களுக்குத் துணை நிற்பது, வாழ்வில் உங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும்.
2. The Honest Friend: நேர்மையான நண்பர்:
கேட்பதற்குக் கசப்பாக இருந்தாலும், இவர்கள் எப்போதும் உங்களிடம் உண்மையை மட்டுமே சொல்வார்கள். ஒருபோதும் பொய்யாக உங்களைப் புகழ மாட்டார்கள்.
இவர்கள் சொல்லும் பயனுள்ள விமர்சனம், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி அடைய மிக உதவியாக இருக்கும். மேலும் நீங்கள் கவனிக்கத் தவறிய விஷயங்களை ஒருவர் சுட்டிக்காட்டுவது நீங்கள் விழிப்புடன் இருக்க உதவுகிறது.
3. The Fun Friend: வேடிக்கையான நண்பர்:
நம் வாழ்வில் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரும் நண்பர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.
வாழ்க்கை நாம் நினைப்பது போல் எப்போதும் இருப்பதில்லை , சில நேரங்களில் மிக மோசமான சூழ்நிலைகளில் நம்மைத் தள்ளி விடுகிறது. உங்கள் நிலையை உங்கள் நண்பரிடம் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் போது கவலையை விடு இந்த நிலை மாறிவிடும், "பாத்துக்கலாம்" என்று சொல்லி உங்களிடம் ஒரு நேர்மறை எண்ணத்தை விதைத்து மட்டுமல்லாமல், உங்கள் கவனத்தைத் திசை திருப்பி உங்கள் கவலையை மறக்கச் செய்து உங்களை மகிழ்விக்கும் நண்பர்கள் இவர்கள்.
4. The Motivator: ஊக்கமளிப்பவர்
உங்கள் இலக்குகளை நீங்கள் அடைய உங்களை உந்தி தள்ளக்கூடிய நண்பர்கள் இவர்கள். நீங்கள் உங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை விட இவர்கள் உங்கள் மேல் அதிகம் வைத்து இருப்பார்கள்.
நம் இலக்குகளை நோக்கி நாம் பயணிக்கும்போது அதில் பல தடைகள் ஏற்படலாம். சில நேரங்களில் நாம் துவண்டு போய் விடுவோம். அந்த தருணங்களில், உன்னால் நிச்சயம் முடியும் மீண்டும் முயற்சி செய் என்று Extra Push கொடுக்க ஒருவர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். உங்கள் வெற்றிக்குப் பின்னால் நிச்சயம் இந்த நண்பர்கள் இருப்பார்கள்.
5. The Wise Mentor: புத்திசாலித்தனமான வழிகாட்டி
உங்களுக்கு ஏதாவது ஒரு சிக்கல், சரியாக முடிவு எடுக்க முடியவில்லை, என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றால் நீங்கள் முதலில் பேசுவது இந்த நண்பரிடம்தான். இவர்கள் உங்களை விட வயதில் பெரியவர்களாக இருக்கலாம், அனுபவம் அதிகம் இருக்கலாம். உங்களை விடச் சிறியவர்களாக இருந்தாலும் சூழ்நிலையைப் புரிந்து உங்களுக்கு வழிகாட்டக் கூடிய மனப்பக்குவம் இவர்களிடம் இருக்கும்.
புத்திசாலித்தனமான நண்பர் நம்முடன் இருப்பது நம்மை மேலும் வலிமையாக்குகிறது.
வள்ளுவர் கூறுவது போல,
"நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு"
நல்ல தன்மையுடையவரோடு கொண்ட நட்பு வளர்பிறை போல வளரும், பேதைகளின் நட்பு தேய்பிறை போல நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போகும்.
இந்த ஐந்து விதமான நண்பர்கள் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை, ஒருவேளை கிடைத்து விட்டால் அவர்களின் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
நல்ல நண்பர்களாக நாம் இருக்க முயற்சி செய்வோம்.
நன்றி,
நரேந்திரன் பாலகிருஷ்ணன்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...