`ஊதியம் கிடையாது' - போராட்டம் அறிவித்த அரசு ஊழியர்களுக்கு, தமிழ்நாடு அரசு எச்சரி...
"50 ஆண்டுகால வேண்டுதல்; சபரிமலை 18-ஆம் படியேறி தரிசனம்"- செளமியா அன்புமணி ஆனந்தக் கண்ணீர்
கேரள சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சமயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து 18ம் படி ஏறி ஐய்யப்பனை தரிசிக்கச் செல்வார்கள்.

இந்த மாதங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மாசி, பங்குனி மாதங்களிலும் பக்தர்கள் சபரிமலைக்குச் செல்கின்றனர். இந்த நாள்களில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் சபரிமலைக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். அந்த, அன்புமணி ராமதாஸின் மனைவியும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி வேட்பாளராக பா.ம.க சார்பில் போட்டியிட்ட செளமியா அன்புமணி,
தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் ஒரு பதிவில் "சபரிமலையில், 18-ஆம் படியேறி சுவாமி ஐயப்பன் தரிசனம் செய்ய வேண்டும் என்பது என் சிறு வயது கனவு. 50 ஆண்டுகால வேண்டுதல் நிறைவேறியது. சுவாமியே சரணம் ஐயப்பா..!" என்று காணொலியுடன் பதிவிட்டிருக்கிறார்.
சபரிமலையில், 18-ஆம் படியேறி சுவாமி ஐயப்பன் தரிசனம் செய்ய வேண்டும் என்பது என் சிறு வயது கனவு. 50 ஆண்டுகால வேண்டுதல் நிறைவேறியது. சுவாமியே சரணம் ஐயப்பா..!#Sabarimala | #ayyappaswamy | #ayyappadevotionalpic.twitter.com/aRct5U3umM
— Sowmiya Anbumani (@Sowmiyanbumani) March 18, 2025
ஆனந்தக் கண்ணீருடன் ஐயப்பனை தரிசனம் செய்யும் செளமியா அன்புமணியின் நெகிழ்ச்சி மிகுந்த காணொலி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.