Sunita Williams: விண்வெளிக்கு `சமோசா' `பகவத்கீதை' எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்; காரணம் இதுதான்
சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக பயணித்து வரும் நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோர் ஆகியோரை பூமிக்கு தஅழைத்து வர டிராகன் விண்கலன் அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலன் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தது.
இந்த விண்கலனில் தான் விண்வெளி வீரர்கள் பூமி திரும்பவுள்ளனர்.
இன்று நள்ளிரவுக்கு மேல் பூமியை டிராகன் விண்கலம் வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படும் காட்சி மற்றும் பூமிக்கு வந்துசேரும் காட்சிகள் நேரடியாக நாசா ஒளிப்பரப்பு செய்யவுள்ளது.
கடந்த காலத்தில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குச் செல்லும் போது சமோசா மற்றும் பகவத் கீதையை தன்னுடன் எடுத்துச் சென்றார். இது விவகாரம் பல்வேறு விவாதங்களைப் பெற்றது.
இது குறித்து சுனிதா வில்லியம்ஸ் பேசுகையில், "இவை என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை பகவத் கீதை என் தந்தை எனக்குக் கொடுத்த பரிசு என்றும் நெகிழ்ந்தார். நான் எல்லோரையும் போலவே விண்வெளியிலும் இருக்கிறேன் என்பதை எடுத்துக்காட்ட இது உதவுவதாக கூறினார் சுனிதா.