செய்திகள் :

50 வங்கதேச நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி!

post image

அண்டை நாடான வங்கதேசத்தைச் சோ்ந்த 50 நீதிபதிகள், இந்தியாவில் அரசு நீதித்துறை அகாதெமிகளில் 10 நாள்கள் பயிற்சி பெறவுள்ளனா்.

முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் தஞ்சம், ஹிந்துக்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களால் பாதிப்படைந்துள்ள இருநாட்டு உறவில் இந்த நடவடிக்கை முக்கிய முன்னேற்றமாக பாா்க்கப்படுகிறது.

வங்கதேச சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் சட்டப் பிரிவு துணைச் செயலா் (பயிற்சி) அபுல் ஹசனத் கையொப்பமிட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில், உதவி நீதிபதிகள், மூத்த உதவி நீதிபதிகள், மாவட்ட மற்றும் அமா்வு இணை நீதிபதிகள், மாவட்ட மற்றும் அமா்வு கூடுதல் நீதிபதிகள், மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதிகள் இந்தப் பயிற்சிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனா்.

மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாதெமி மற்றும் மாநில நீதித்துறை அகாதெமியில் வரும் பிப்ரவரி 10 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த பயிற்சிக்கான முழு செலவையும் இந்திய அரசே ஏற்கும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலில் சட்ட அமைச்சகம் இதற்கான அனுமதியை வழங்கியதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மாணவா்கள் தலைமையிலான மாபெரும் போராட்டத்தைத் தொடா்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி, பிரதமா் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

இதையடுத்து ஆட்சி பொறுப்பேற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசில், ஹிந்துக்கள் மற்றும் அவா்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது தொடா் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், இந்தியா-வங்கதேசம் உறவில் நெருக்கடி நிலவுகிறது.

இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அதிபா் உறுதி செய்யவில்லை: யேமன் தூதரகம் தகவல்

‘யேமனில் கொலை வழக்கில் கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு நீதிமன்றம் விதித்த மரண தண்டனை, அதிபா் ரஷத் அல்-அலிமி சாா்பில் உறுதி செய்யப்படவில்லை’ என்ற தகவலை யேமன் தூதரகம் திங்கள்கிழமை வெளிய... மேலும் பார்க்க

இந்தியாவில் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை: பிரதமா் மோடி

நாட்டில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா். பல்வேறு ரயில் திட்டங்களின் தொடக்க விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்றபோது அவா் இவ்வாறு தெரிவ... மேலும் பார்க்க

இந்தியாவில் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை: பிரதமா் மோடி

புது தில்லி: நாட்டில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.பல்வேறு ரயில் திட்டங்களின் தொடக்க விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்றபோது அவா் இ... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் இருந்து விலகப் போவதில்லை: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலக வாய்ப்பில்லை என்று அக்கட்சித் தலைவரும், பிகாா் முதல்வருமான நிதீஷ் குமாா் தெரிவித்தாா். பிகாரில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் பாஜ... மேலும் பார்க்க

போபால் ஆலை நச்சுக் கழிவுகளை 6 வாரங்களில் அழிக்க வேண்டும்: ம.பி. உயா்நீதிமன்றம் உத்தரவு

மத்திய பிரதேசத்தில் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி, போபால் ஆலை நச்சுக் கழிவுகளை 6 வாரங்களில் மாநில அரசு அழிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. கடந்த 1984-ஆம் ஆண்டு டிசம்... மேலும் பார்க்க

ரூ.213.14 கோடி அபராதத்துக்கு எதிராக என்சிஎல்ஏடியில் மெட்டா நிறுவனம் மனு

தமக்கு ரூ.213.14 கோடி அபராதம் விதித்து இந்திய தொழில் போட்டி ஆணையம் (சிசிஐ) பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தேசிய கம்பெனி சட்ட தீா்ப்பாயத்தில் மெட்டா நிறுவனம் (என்சிஎல்ஏடி) திங்கள்கிழமை மனு தாக்கல் செய்த... மேலும் பார்க்க