செய்திகள் :

55 சதவீதம் அதிகரித்த காபி ஏற்றுமதி

post image

இந்திய காபிக்கான தேவை சா்வதேச அளவில் அதிகரித்து வருவதால், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நாட்டின் காபி ஏற்றுமதி 55 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து இந்திய காபி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியா ரூ.7,771.88 கோடி மதிப்பிலான காபியை ஏற்றுமதி செய்துள்ளது.

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.4,956 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் காபி ஏற்றுமதி 55 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் நாடு 2.2 லட்சம் டன் காபியை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் காபி ஏற்றுமதி 1.91 லட்சம் டன்னாக இருந்தது.

ஐரோப்பிய ஏற்றுமதி விதிமுறைகளின் கீழ், சா்வதேச சந்தையில் காபி விலை கணிசமாக உயா்ந்துள்ளது. மதிப்பீட்டு காலகட்டத்தில் இந்திய காபி விலை கிலோவுக்கு சராசரியாக ரூ.352-ஆக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.259-ஆக இருந்தது.

இந்திய காபியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அந்த நாடு இந்தியாவின் மொத்த காபி ஏற்றுமதியில் 20 சதவீதம் பங்கு வகிக்கிறது. ஜொ்மனி, ரஷியா, ஐக்கிய அரபு அமீகரகம், பெல்ஜியம் ஆகியவை சோ்ந்து 45 சதவீத இந்திய காபியை இறக்குமதி செய்கின்றன.

2023-24 சாகுபடி பருவத்தில் இந்தியாவின் காபி உற்பத்தி சுமாா் 3.6 லட்சம் டன்னாக உள்ளது. உலக காபி ஏற்றுமதியில் இந்தியா 6 சதவீத பங்கைக் கொண்டு உலகின் ஐந்தாவது பெரிய காபி ஏற்றுமதியாளராக உள்ளது.

இந்தியாவின் காபி உற்பத்தியில் கா்நாடகம் 70 சதவீதம் பங்கு வகிக்கிறது. 20 சதவீத பங்களிப்புடன் காபி உற்பத்தியில் கேரளம் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. தமிழ்நாடு 5.7 சதவீத பங்களிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.5,000 கோடி திரட்டிய எஸ்பிஐ

கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.5,000 கோடி மூலதனம் திரட்டியுள்ளது.இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பாசல்-3 ... மேலும் பார்க்க

சென்னை எம்டிசி-க்கு 500 மின்சாரப் பேருந்துகள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு மின்சாரத்தில் இயங்கக் கூடிய 500 பேருந்துகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை, ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் பெற்றுள்ளது.இது குறித்து, ச... மேலும் பார்க்க

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு

நமது நிருபா் பங்குச்சந்தை 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்ட... மேலும் பார்க்க

4வது நாளாக சரிந்த பங்குச் சந்தை! நிஃப்டியில் கரோனாவுக்கு பிறகு பெரும் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகம் 4வது நாளாக இன்றும் (அக். 24) சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி சற்று சரிவுடனேயே முடிந்தது.நிஃப்டி 50-ல் அக்டோபர் மாதத்தில் மட்டும் 5% சரிவு ஏற்பட்டுள்ளது. இது கரோனா க... மேலும் பார்க்க

தங்கம் விலை சற்று குறைந்தது! இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 440 குறைந்துள்ளது.கடந்த வாரம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 58,000-ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டு, தொடர்ந்து விலை உயர்ந்து வந்ததால் நகை ப... மேலும் பார்க்க

என்எல்சி சுரங்கங்களுக்கு நட்சத்திர மதிப்பீட்டு விருது

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கங்களுக்கு தேசிய அளவிலான மதிப்புமிக்க 5 மற்றும் 4 நட்சத்திர மதிப்பீடுகளை வழங்கி மத்திய நிலக்கரி அமைச்சகம் கௌரவித்துள்ளது.புதுதில்லியில் உள்ள ஸ்கோப் கன்வென்... மேலும் பார்க்க