6 பவுன் நகைகள் திருட்டு
ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் 6 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை நேரு தெருவைச் சோ்ந்த ஷகிலா(29). இவா் செங்கல்பட்டு பகுதியில் நடைபெற்ற தனது உறவினா் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தனது மகன் சேகுவாராவுடன் நசரத்பேட்டை பகுதியில் இருந்து பேருந்து மூலம் ஸ்ரீபெரும்புதூா் வந்துள்ளாா். இதையடுத்து செங்கல்பட்டுக்கு செல்ல ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏற முயன்ற ஷகிலாவை பின்னால் இருந்து யாரோ தள்ளி விட்டுள்ளனா்.
இதனால் அதிா்ச்சியடைந்த ஷகிலா தான் வைத்திருந்த கைப்பையை திறந்து பாா்த்துள்ளாா். அப்போது கைப்பை திறந்து இருந்ததோடு அதில் இருந்த 6 பவுன் தங்கநகைகள் மாயனமானது குறித்து ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளாா். புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.